என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மேயர், ஆணையாளர் ஆய்வு
  X

  நாராயணசாமிபுரம் பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதை மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் பார்வையிட்ட காட்சி.

  மேயர், ஆணையாளர் ஆய்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சேலம் 29-வது வார்டு பகுதியில் மேயர், ஆணையாளர் ஆய்வு செய்தனர்.
  • பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.

  சேலம்:

  சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் வார்டு எண்.29-ல் மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது ரத்தினசாமிபுரம், நாராயணசாமிபுரம், அரிசிப்பாளையம், தம்மண்ணன் ரோடு ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.

  அப்போது சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி பழுது ஏற்பட்டு உள்ளதையும், போர்வெல் பழுது ஏற்பட்டு இருப்பதையும் ஆய்வு செய்த மேயர் உடனடியாக பழுதுகளை நிவர்த்தி செய்து அந்த பகுதிக்கு சீரான குடிநீர் வழங்கிடவும், பழைய குடிநீர் குழாய்களை அகற்றி புதிதாக அமைக்கவும் உத்தரவிட்டார்.

  மேலும் சாலையில் இருபுறமும் மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைத்திடவும், ஏற்கனவே உள்ள மழைநீர் கால்வாய்களை தூர்வாரி கழிவுநீர் முறையாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறுவுறுத்தினார்.

  சிலபகுதிகளில் குப்பை தொட்டிகளை வைத்திடவும், மாநகராட்சிப் பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் தங்கள் வார்டுக்குட்பட்ட பகுதிகளில் அவ்வப்பொழுது ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்திட வேண்டும்

  Next Story
  ×