என் மலர்
உள்ளூர் செய்திகள்

போத்தனூர் அருகே தனியார் பள்ளி ஆசிரியை மாயம்
- 27 வயது இளம்பெண். ஈச்சனாரி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
- போலீசார் விசாரணை நடத்தி இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
குனியமுத்தூர்,
போத்தனூர் அருகே வெள்ளலூரை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவர் ஈச்சனாரி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளி முடிந்ததும், அவரை அவரது தந்தை வீட்டிற்கு அழைத்து வந்தார்.
பின்னர் வேலைக்கு சென்று இருக்கும் அவரது தாயை அழைத்து வருவதற்காக அவரது தந்தை சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது இளம்பெண் மாயமாகி இருந்தார்.
எங்கு தேடியும் கிடைக்காததால் போத்தனூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.விசாரணையில், அவர் வேலை பார்க்கும் ஈச்சனாரி தனியார் பள்ளியில், பணியாற்றும் மற்றொரு ஆசிரியர் ஒருவர் சகோதரருடன் இவருக்கு பழக்கம் இருந்தது தெரியவந்தது. இதனால் அவருடன் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
Next Story






