என் மலர்
உள்ளூர் செய்திகள்

மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலின் மாசி கொடைவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
- மகா திருவிழா பத்து நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.
- கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை.
பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோவிலில் மாசி கொடைவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கோவிிலுக்கு குமரி மாவட்டம் மட்டுமல்ல கேரளாவில் இருந்தும் ஏரளாமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். 10 நாட்கள் நடைபெறும் இந்த மகா திருவிழாவைக் காணத் தமிழ் நாடு மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
இந்த கொடியேற்ற நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதியரசர் விக்டோரியா கெளரி, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார், திருக்கோயில் இணை ஆணையர் ஜான்சி ராணி உட்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினரின் தாயார் தமிழ்செல்வி வசந்தகுமார், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி உதயம், மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், மண்டைக்காடு பேரூராட்சி தலைவர் ராணி ஜெயந்தி காங்கிரஸ் விளையாட்டு துறை கிழக்கு மாவட்ட தலைவர் அருண், மண்டைக்காடு பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் சுந்தர், வெள்ளிமலை பேரூர் காங்கிரஸ் தலைவர் தயனேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






