என் மலர்
உள்ளூர் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் மகளிர் குழுக்களுக்கு மணிமேகலை விருது
- சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
- தகுதியான அமைப்புகள் தங்கள் விண்ணப்பங்களை அடுத்த மாதம் 25-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.
தென்காசி:
தமிழகத்தில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளில் உள்ள சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகிய சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
அந்தவகையில் தென்காசி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும், தகுதியான சுய உதவிக்குழுக்கள் சமுதாய அமைப்புகள் தங்களின் விண்ணப்பங்களை அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் செயல்படும் ஊரகம் நகர்புற வாழ்வாதார இயக்க அலகில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் 25-ந் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Next Story