என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குலசேகரன்பட்டினத்தில் மாங்கனி திருவிழா
    X

    பக்தர்களுக்கு மாங்கனிகள் பிரசாதமாக வழங்கிய காட்சி.

    குலசேகரன்பட்டினத்தில் மாங்கனி திருவிழா

    • மாங்கனி திருவிழாவையொட்டி நெல்லை திருவுருமாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டுக் குழு தலைவர் வள்ளிநாயகம் தலைமையில் காலை முதல் மாலை வரை இங்கு உள்ள அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் வழிபாடு நடைபெற்றது.
    • பூமி செழிக்க மழை வளம் வேண்டி திருஞானசம்பந்தரின் மழைப்பதிகம் பாடப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் பைபாஸ் சாலையில் காரைக்கால் அம்மையார் கோவில் உள்ளது. 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார் அமர்ந்த நிலையில் அருள்பாலிப்பவரும், இறைவனால் அம்மையே என்றழைக்கப்பட்டவருமான காரைக்காலம்மையார் பேயுருவம் பெற்ற மண்டபத்தில் மாங்கனி திருவிழாவையொட்டி நெல்லை திருவுருமாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டுக் குழு தலைவர் வள்ளிநாயகம் தலைமையில் காலை முதல் மாலை வரை இங்கு உள்ள அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் வழிபாடு நடைபெற்றது. காரைக்காலம்மையாரின் பதிகங்கள், பெரியபுராணப் பாடல்கள், திருமுறை விண்ணப்பம் செய்யப்பட்டது. பூமி செழிக்க மழை வளம் வேண்டி திருஞானசம்பந்தரின் மழைப்பதிகம் பாடப்பட்டது. மாலையில் காரைக்காலம்மையார் மண்டபத்தில் மாங்கனிகள் படைத்து சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பக்தர்களுக்கு மாங்கனி பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், சிவனடியார்கள் இல்லங்குடி, சண்முகம், உடன்குடி ஓன்றிய பா.ஜ.க.துணைத்தலைவி வசந்தி உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×