என் மலர்
உள்ளூர் செய்திகள்

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 8-ம் நாளான நேற்று யூனியன் அலுவலகம் சார்பில் மண்டகப்படி வழங்கப்பட்டது.
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மண்டகப்படி
- விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- விளாத்திகுளம் யூனியன் அலுவலகம் சார்பில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு மண்டகப்படி கொண்டு வரப்பட்டது.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-ம் நாளான நேற்று அதிகாலை 2 மணிக்கு ராஜராஜேஸ்வரி மீனாட்சி அம்பிகைக்கு பட்டாபிஷேகம், 6 மணிக்கு அம்மன் பூப்பல்லாக்கில் எழுந்தருளல், மாலை 5 மணிக்கு சிவகாமி அம்பிகா சமேத நடராஜருக்கு அபிஷேகம், இரவு 7 மணிக்கு நடராஜர் பச்சை சாத்தியில் எழுந்தருளல், 8.30 மணிக்கு சுவாமி அம்பாள் அபிஷேகம், 11 மணிக்கு சுவாமி அம்பாள் எழுந்தருளல் திக்விஜயம் ஆகியவை நடந்தது.
முன்னதாக மாலை 6 மணிக்கு விளாத்திகுளம் யூனியன் அலுவலகம் சார்பில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு மண்டகப்படி கொண்டு வரப்பட்டது.
யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் தலைமையில் யூனியன் அலுவலகத்தில் இருந்து அம்பாளுக்கு அலங்காரம் பட்டு மற்றும் பூஜை பொருள்கள் ஆகியவை மேளங்கள் முழங்க மதுரை சாலை, காய்கறி மார்க்கெட் ஆகிய முக்கிய வீதிகள் வழியாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. பின்பு அங்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் செய்யப்பட்டது.நிகழ்ச்சியில் யூனியன் துணைத்தலைவர் சுப்புலட்சுமி, பி.டி.ஓ தங்கவேல் மற்றும் யூனியன் அலுவலக ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






