search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமன்னன் திரைப்படம் வெளியீடு: நெல்லை திரையரங்கில் ரசிகர்களுக்கு  தி.மு.க. சார்பில் மரக்கன்றுகள்
    X

    திரைப்படம் பார்க்க வந்த சிறுமிக்கு, அப்துல்வகாப் எம்.எல்.ஏ., பூச்செடி வழங்கிய காட்சி. 

    மாமன்னன் திரைப்படம் வெளியீடு: நெல்லை திரையரங்கில் ரசிகர்களுக்கு தி.மு.க. சார்பில் மரக்கன்றுகள்

    • நெல்லை மாவட்டத்திலும் ஏராளமான தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டுள்ளது.
    • உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் செல்வபாபு ஏற்பாட்டில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    தமிழக அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படம் இன்று வெளியானது.

    நெல்லை மாவட்டத்திலும் ஏராளமான தியேட்டர்களில் படம் திரை யிடப்பட்டுள்ளது. டவுனில் உள்ள ஒரு திரையரங்கில் படம் பார்க்க வந்த பொது மக்கள், ரசிகர்களுக்கு தி.மு.க சார்பில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் செல்வபாபு ஏற்பாட்டில் மரக்கன்றுகள், இனிப்புகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பாளை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அப்துல்வகாப் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வக்கீல் தினேஷ், தகவல் தொழில் நுட்ப அணி காசிமணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×