search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக தண்ணீர் தின சிறப்பு கிராம சபை கூட்டம்
    X

    திண்டியூர் கிராமசபை கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    உலக தண்ணீர் தின சிறப்பு கிராம சபை கூட்டம்

    • உலக தண்ணீர் தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
    • நீரின்றி அமையாது உலகு என்ற திருவள்ளுவரின் வாக்கிற் கேற்ப மக்களுக்கு நீர் மிக அவசியம்.

    மதுரை

    இன்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி மதுரை மாவட்டத்தில் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட திண்டியூர் ஊராட்சியில் தலைவர் லட்சுமி சந்திர சேகர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் துரைராஜ், ஊராட்சி செயலர் சசிகுமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் தலைவர் லட்சுமி சந்திர சேகர் பேசும்போது கூறிய தாவது:-

    நமது ஊராட்சியில் தண்ணீர் தேவைகளை மக்கள் அறிகிற வண்ணம் ஓவியங்களாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே ஆங்காங்கே வரைந்து வைத்துள்ளோம். நீரின்றி அமையாது உலகு என்ற திருவள்ளுவரின் வாக்கிற் கேற்ப மக்களுக்கு நீர் மிக அவசியம். மக்கள் தண்ணீரை வீணடிக்காமல் தேவையான அளவிற்கு பயன்படுத்த வேண்டும். ஆதி காலத்தில் மக்கள் ஏரி, குளங்களில் நீர் எடுத்து வந்த நிலைமையை நாம் அறிந்திருக்கிறோம், தெரிந்திருக்கிறோம். பின்னர் கிணறு வெட்டி அதில் இருந்து மக்கள் தண்ணீர் எடுத்து தங்கள் தேவைக்கு பயன்படுத்தினர்.

    தற்போது மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு இடங்களிலும் குடிநீர் வசதி செய்ய திட்டங்கள் தீட்டி யுள்ளார். விரைவில் லோயர் கேம்பில் இருந்து முல்லை பெரியார் கூட்டுக் குடிநீர் வர இருக்கிறது.

    தற்போது வைகை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் இந்த ஊராட்சிக்கு சிறந்த முறையில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதற்காக தமிழக முதல்-அமைச்சருக்கும், அமைச்சர் மூர்த்திக்கும், கலெக்ட ருக்கும், கூடுதல் கலெக்டரு க்கும் மற்றும் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த கிராம சபை கூட்டத்தின் வாயிலாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×