என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாஸ்மாக் கடையை அகற்றகோரி கிராம மக்கள் சாலை மறியல்
    X

    சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்.

    டாஸ்மாக் கடையை அகற்றகோரி கிராம மக்கள் சாலை மறியல்

    • டாஸ்மாக் கடையை அகற்றகோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • பெண்கள் உள்பட 300 பேர் பங்கேற்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கேசம்பட்டி ஊராட்சிக் குட்பட்ட சாணிப்பட்டியில் மேலூர்-நத்தம் சாலையின் பிரதான பகுதியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

    இங்கு வருவோர் மது குடித்து விட்டு போதையில் சாலையில் விழுந்து கிடப்ப தும், சிலர் தகராறில் ஈடுபடு வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    எனவே சாணிப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர் பாக கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தற்போதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    சாலை மறியல்

    இதை கண்டித்தும், டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை சாணிப்பட்டி, கேசம்பட்டி, அருக்கம்பட்டி, கடுமிட்டான் பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடை முன்பு மேலூர்-நத்தம் சாலையில் திரண்டனர்.அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறி யலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மேலவளவு போலீ சார் மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் நடந்தும் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வரவில்லை.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்கள் ஊரில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம். கிராமத்தை சேர்ந்த ஆண்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். அதுவரை எங்கள் போராட் டம் தொடரும் என்றனர்.

    Next Story
    ×