search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர்களை தாக்கி பணம், செல்போன், நகை வழிப்பறி
    X

    வாலிபர்களை தாக்கி பணம், செல்போன், நகை வழிப்பறி

    • மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர்களை தாக்கி பணம் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    மதுரை

    மதுரை சக்கிமங்கலம் சந்திரலேகா நகரை சேர்ந்த பால்ராஜ் மகன் சரவணன் (வயது22).இவர் ஆரப்பா ளையம் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டி ருந்தார். அப்போது 2 வாலிபர்கள் அவரை கத்தி முனையில் மிரட்டி ரூ.600-ஐ வழிப்பறி செய்து தப்பினர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் சரவணன் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வழிப்பறியில் ஈடுபட்ட கரிமேடு பொன்னகரம் 4-வது தெருவை சேர்ந்த பாண்டியராஜன் மகன் மனோஜ் சிவா என்ற மனோஜ் (22), தத்தனேரி களத்துபொட்டல் கண்ணன் மகன் கிருஷ்ணகுமார் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    செல்போன் பறிப்பு

    அவனியாபுரம் பெரியசாமி நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (49). இவர் விளக்குத்தூண் பகுதியில் உமறுப்புலவர் பள்ளி அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அவரை 3 வாலிபர்கள் வழிமறித்து தாக்கினர்.பின்னர் அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதன் அடிப்படையில் 17 வயது சிறுவன், காளவாசல் தமிழ் தென்றல் 3-வது தெரு மோகன் மகன் விமல் (19), அரசரடி சின்ன கண்ணன் மகன் அஜய் பாண்டி (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    நகை பறிப்பு

    திருமங்கலம் தென்கால் நகரை சேர்ந்த லட்சம் மகன் நிஷாந்தன் (25). இவர் புட்டுத்தோப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அவரது நண்பரிடம் சிலர் வாய்த் தகராறில் ஈடுபட்டனர்.இதை நிஷாந்தன் கண்டித்தார்.

    ஆத்திரம் அடைந்த 4 வாலிபர்களும் நிஷாந்தனை தாக்கினர். மேலும் அவர் அணிந்திருந்த 1¼ பவுன் நகைையயும் பறித்துக் கொண்டு தப்பினர். இது குறித்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மேலமாசி வீதி மக்கனார் தோப்பு சந்திரன் மகன் முத்துவேல் (27), வெங்கடசாமிநாயுடு அக்ரகாரம் சரவணன் மகன் ஆகாஷ் (20), சிம்மக்கல் தைக்கால் முதல் தெரு மணிகண்டன் மகன் ஸ்ரீ ராம் (22), நெல்பேட்டை காயிதே மில்லத் நகர் அப்துல் ஜாபர் மகன் முகமது அசாருதீன் (20) ஆகியோரை கைது செய்தனர்.

    Next Story
    ×