என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகை கடையில் 10 பவுன் திருடிய பெண்
    X

    நகை கடையில் 10 பவுன் திருடிய பெண்

    • நகை கடையில் 10 பவுன் நகை திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • 10 பவுன் தங்க சங்கிலிகளை அபேஸ் செய்து தப்பிச் சென்றார்

    மதுரை

    மதுரை கீழவாசல், லட்சுமிபுரம் தெருவைச் சேர்ந்தவர் கோபி (வயது 38). இவர் தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கடைக்கு வந்த ஒரு பெண் தங்க நகை வாங்குவது போல் ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பிய கடையில் இருந்த 10 பவுன் தங்க சங்கிலிகளை அபேஸ் செய்து தப்பிச் சென்றார்.

    இந்த நிலையில் கோபி நேற்று இரவு நகை இருப்பை சோதனை செய்து பார்த்தார். அப்போது கடையில் இருந்த 10 பவுன் தங்க சங்கிலி மாயமானது தெரியவந்தது. இதுதொடர்பாக கோபி விளக்குத்தூண் குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×