search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரை திருப்பி தராததால் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய வாலிபர்
    X

    காரை திருப்பி தராததால் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய வாலிபர்

    • கப்பலூர் சுங்கச்சாவடியில் காரை திருப்பி தராததால் ஒரு வாலிபர் அலுவலகத்தை அடித்து நொறுக்கினார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சவுடார்பட்டி மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் அரவிந்த்குமார் (வயது30). இவர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

    இவரிடம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுங்க கட்டணம் கட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் கேட்டுள்ளனர். ஆனால் திருமங்கலம் நகர் எல்லைக்குட்பட்ட பகுதியில் சுங்கச்சாவடி இருப்பதால் அதனை அகற்ற வலியுறுத்தி இப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட வாகனங்கள் சுங்கச்சாவடியை கடக்கும் போது அடிக்கடி தகராறு ஏற்பது வழக்கம். மேலும் திருமங்கலம் நகர் பகுதியில் மட்டும் வாகனங்களுக்கு கட்டண விலக்கு உள்ளது. இருப்பினும் அடிக்கடி சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் அரவிந்தன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்தபோது சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் கேட்டதால், காரை அங்கேயே நிறுத்தி விட்டு சென்றுள்ளார். மேலும் நேற்று இரவு தனது காரை எடுக்க சென்றார். அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் திருமங்கலம் போலீசில் புகார் செய்துள்ளோம். அங்கு சென்று பெற்று கொள்ளுங்கள் என்று கூறி காரை எடுத்து செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த அரவிந்த்குமார் சுங்கசாவடி அலுவலகத்தை அடித்து நொறுக்கினார்.இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட னர். இச்சம்பவம் குறித்து கப்பலூர் சுங்கச்சாவடி மேலாளர் ராஜா கொடுத்த புகாரின் பேரில் அரவிந்த்குமார் மீது வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய அவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×