பாசிசத்தை நுழைய விடாத வகையில் மாணவரணி மாநாடு நடைபெறும்-அமைச்சர் பேச்சு

தமிழகத்தில் பாசிசத்தை நுழைய விடாத வகையில் மாணவரணி மாநாடு நடைபெறும் என்று அமைச்சர் மூர்த்தி பேசினார். மதுரை கருப்பாயூரணியில் தி.மு.க. மாநில மற்றும் மாநகர், புறநகர் மாவட்ட மாணவரணி கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசினார். அருகில் மாநில செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர் மருதுபாண்டி, வெங்கடேசன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர்.
கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசினார். அருகில் மாநில செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர் மருதுபாண்டி, வெங்கடேசன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர்.
Published on

மதுரை

மதுரை கருப்பாயூரணியில் தி.மு.க. மாநில மற்றும் மாநகர், புறநகர் மாவட்ட மாணவரணி கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் வடக்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் மருதுபாண்டி தலைமையில் நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-

உதயநிதி ஸ்டாலின் மாணவரணி, இளைஞர் அணிகளுடன் இணைந்து செயல்படுகிறார். இந்தி திணிப்பு போராட்டத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தது தி.மு.க. மாணவர் அணி தான். அப்போது மாணவ

ரணியில் இருந்தவர்கள் தான் தற்போது அரசியலில் முக்கிய பொறுப்புக்கு வந்துள்ளனர்.

கல்லூரிகளில் மாணவரணியில் இருப்பவர்கள் திராவிட மாடலை மக்கள் மத்தியில் எடுத்துச்சொல்ல வேண்டும். ஆட்சியில் இருக்கும் போதும், இல்லாத போதும் உணர்வு பூர்வமாக இந்தியை எதிர்க்கும் ஒரே இயக்கம் தி.மு.க. மட்டுமே ஆகும். இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்திற்கு உதயநிதி ஸ்டாலின் தலைமை ஏற்க இருக்கிறார்.

பாசிசத்தை தமிழகத்தில் நுழைய விடாத வகையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு சிறக்க வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதல் மாணவரணி மாநில செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ., சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், மாவட்ட பிரதிநிதி அழகு பாண்டி,வழக்கறிஞர் கலாநிதி, மாணவர் அணி இணை, துணை அமைப்பாளர்கள் அதலை செந்தில்குமார், பூவை ஜெரால்டு, மண்ணை சோழராஜன், சேலம் தமிழரசன், உமரிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com