என் மலர்
உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வு எழுதும் மாணவர்களைஅரசு ஊக்கப்படுத்தவில்லை-ஆர்.பி.உதயகுமார்
- நீட் தேர்வு எழுதும் மாணவர்களை அரசு ஊக்கப்படுத்தவில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டினார்.
- மக்கள் முகம் சுளிக்கின்றனர்.
மதுரை
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. அரசின் நிர்வாக குளறுபடி, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு இவைகளால் தமிழகம் தலைகுனிந்து உள்ளது. இன்றைக்கு தமிழக விளையாட்டு வீரர்களை தேசிய அளவில் பங்கேற்காத நிலையை உருவாக்கி இளை ஞர்கள், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி யாகி உள்ளது.
எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் விளை யாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்புகளில் 3 சதவீத இட ஒதுக்கீடு அளித்து அர சாணை வெளியிட்டார். இன்றைக்கு மு.க.ஸ்டாலின் உயர் மருத்துவமனைக்கு கருணாநிதி பெயரை சூட்டுகிறார்.
அதேபோல் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி உரு வாக்கிய பஸ் நிலையத்திற்கு கருணாநிதி பெயரை சூட்டுகிறார். மதுரையில் நூலகத்திற்கு கருணாநிதி பெயரை சூட்டுகிறார். கடலில் கருணாநிதி பெயரில் நினைவு சின்னம் அமைக்க முயற்சிக்கிறார். சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் கருணாநிதி பெயரில் அரங்கம். இப்படியே சென்றால் தமிழ்நாடு என்னவாகும்? இதைப் பார்த்து மக்கள் முகம் சுளிக்கின்றனர்.
எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த போது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நடத்தினார். அதில் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலை யத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை வைத்தார்.
மதுரை மாட்டுத்தாவணி நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை வைத்தார். இது தலைவருக்கு விசுவாசம் உள்ள தொண்டர் செய்யும் மரியாதையாகும். ஆனால் மு.க.ஸ்டாலின் செய்வது தந்தைக்கு மகன் ஆற்றும் கடமையாக உள்ளது.
நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் முதலிடத்தில் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதே சமயம் கடந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்ச்சி சதவீதத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டு குறைவாக தான் உள்ளது. தமிழக மாண வர்கள் திறமை உள்ளவர்கள். ஆனால் அரசு ஊக்கப்படுத்த வில்லை. ஏற்கனவே நீட் தேர்வு ரத்து ரகசியம் என்று கூறினார்கள். ஆனால் எதையும் செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






