search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை மத்திய ஜெயிலில் அதிநவீன எக்ஸ்ரே பேக்கேஜ் மிஷின்
    X

    அதிநவீன எக்ஸ்ரே பேக்கேஜ் மிஷினை ஆய்வு செய்த அதிகாரிகள்.

    மதுரை மத்திய ஜெயிலில் அதிநவீன எக்ஸ்ரே பேக்கேஜ் மிஷின்

    • மதுரை மத்திய ஜெயிலில் அதிநவீன எக்ஸ்ரே பேக்கேஜ் மிஷின் பொருத்தப்பட்டுள்ளது.
    • ஜெயிலில் கைதிகள் மற்றும் உடைமைகளை சோதனை செய்ய அதிநவீன கருவிகள் இல்லை.

    மதுரை

    தமிழகத்தில் மதுரை உள்பட 9 இடங்களில் மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. அங்கு பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் தமிழக சிறைத்துறை போலீஸ் டி.ஜி.பி அமரேஷ் பூஜாரி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    மதுரை கரிமேடு பகுதியில் மத்திய ஜெயில் உள்ளது. இங்கு 1850 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை பாதுகாக்கும் பணியில் 500-க்கும் மேற்பட்ட சிறைத்துறை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரை மத்திய ஜெயிலில் கைதிகள் மற்றும் உடைமைகளை சோதனை செய்ய அதிநவீன கருவிகள் இல்லை. எனவே ஜெயிலுக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் ரகசியமாக எடுத்துச் செல்லப்பட்டன.

    எனவே மதுரை மத்திய ஜெயிலில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி உத்தரவிட்டார். இதன்படி மதுரை மத்திய ஜெயிலுக்குள் பல்வேறு இடங்களில் 50-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டன. அடுத்த படியாக சிறைவாசிகளுக்கு இன்டர்காம் நேர்காணல் வசதி ஏற்பாடு செய்து தரப்பட்டது. மேலும் புதிதாக ஒரு நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் கைதிகளின் உடைமைகளை சோதனை செய்யும் வகையில் அதிநவீன சாதனங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்று டி.ஜிபி. அமரேஷ் பூஜாரி உத்தரவிட்டார். இதன்படி மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு வசந்த கண்ணன் மற்றும் அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அதிநவீன கருவிகளை கொள்முதல் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

    இதன் அடிப்படையில் புதிய எக்ஸ்ரே பேக்கேஜ் மிஷின் கொள்முதல் செய்யப்பட்டு, மதுரை மத்திய ஜெயில் நுழைவாயிலில் நிர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறைக்குள் கொண்டு செல்லும் பொருட்கள் அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்த முடியும். மதுரை மத்திய ஜெயிலில் புதிய எக்ஸ்ரே பேக்கேஜ் மிஷின் செயல்பாட்டை, சிறைத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-

    மதுரை மத்திய ஜெயில் வளாகத்தில் அதிநவீன எக்ஸ்ரே பேக்கேஜ் மிஷின் பொருத்தப்பட்டு உள்ளது. இது கைதிகளின் உடமைகளை துல்லியமாக பரிசோதனை செய்யும். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து செல்ல முயன்றால், அதனை இந்த அதிநவீன எந்திரம் உடனடியாக காட்டிக் கொடுத்து விடும்.

    மதுரை மத்திய ஜெயிலில் அதிநவீன எக்ஸ்ரே பேக்கேஜ் மிஷின் பொருத்தப்பட்டு இருப்பதால், ஜெயிலுக்குள் இனிவரும் காலங்களில் தடை செய்யப்பட்ட பொருட்களின் பயன்பாடு முற்றிலுமாக தடுக்கப்படும் .

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×