search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

    • ஆடி கடைசி வெள்ளியான இன்று அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    மதுரை

    தமிழ் மாதங்களில் அம்மன் வழிபாட்டுக்கு உகந்த மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. இதனால் ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் திருவிழாக்கள் கொண்டா டப்படுவது வழக்கம்.

    குறிப்பாக ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப் படும். பக்தர்களுக்கு கூழ் வார்த்தல், நேர்த்திக் கடன் செலுத்துதல், முளைப்பாரி திருவிழாக்கள் நடைபெறும். அம்மனுக்கு தீச்சட்டி, பால்குடம், ஆயிரம் கண் பானை, மாவிளக்கு எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர்.

    இதில் பிரசித்தி பெற்ற ஆடி கடைசி வெள்ளிக் கிழமையான இன்று அனைத்து அம்மன் கோவில்களிலும், பிற முக்கிய கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷே கங்கள் நடந்தன. ஏராள மான பெண்கள் பொங்கலிட்டும், விளக்கேற்றியும் வழிபட்டனர்.

    மதுரை சுந்தரராஜபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி உற்சவ விழா மற்றும் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை யொட்டி வைகை ஆற்றில் இருந்து பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் போலீசார் ஊர்வலமாக வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மடப்புரம் பத்திரகாளி யம்மன் கோவிலிலும் ஆடி வெள்ளிக்கிழமையை யொட்டி திரளான பக்தர் கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்ட னர்.

    ரிசர்வ் லைன் மாரியம் மன் கோவில், திருப்பரங் குன்றம் வெயிலுகந்த அம்மன் கோவில், ஜெய்ஹிந்துபுரம் வீரகாளியம்மன் கோவில், மறவர்சாவடி தசகாளி யம்மன் கோவில், சொக்க லிங்கநகர் சந்தனமாரி யம்மன் கோவில், பி.பி.சாவடி பஸ் நிறுத்தம் காளியம்மன்-மாரியம்மன் கோவில், பழங்காநத்தம் நேருநகர் அங்காள ஈஸ்வரி கோவில், புதூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட நகரில் உள்ள பல்வேறு கோவில் களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப் பட்டு பூஜைகள், தீபாரா தனை நடந்தது.

    அழகர்கோவில், நூபுர கங்கை, ராக்காயி அம்மன் கோவிலில் ஏராளமானோர் வழிபட்டு நீராடினர். சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப் பட்டு பூஜைகள், தீபாராதனை நடந்தது.

    Next Story
    ×