search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்
    X

    சிறப்பு ரெயில்

    தென்மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்

    • தென்மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
    • திருநெல்வேலியில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

    மதுரை

    ரெயில்வே தேர்வு வாரியம் பல் பணியிட ங்களுக்கான 2-ம் கட்ட கணினி வழி தேர்வை வருகிற 16 ,17, 18 ஆகிய தேதிகளில் நடத்த உள்ளது. இதற்காக தூத்துக்குடி, திருநெல்வேலியில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

    திருநெல்வேலி-பெங்களூரு சிறப்பு ரெயில் (06046) திருநெல்வேலியில் இருந்து வருகிற 13-ந் தேதி இரவு 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு பெங்களூரூ சென்றடையும்.

    மறு மார்க்கத்தில் பெங்களூரு- திருநெல்வேலி சிறப்பு ரெயில் (06045) பெங்களூருவில் இருந்து வருகிற 17-ந் தேதி மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இந்த ரெயில்கள் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், ஜோலார்பேட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    தூத்துக்குடி - கர்னூல் டவுன் சிறப்பு ரெயில் (06047) தூத்துக்குடியில் இருந்து வருகிற 13-ந் தேதி பகல் 12 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு கர்னூல் டவுன் சென்று சேரும்.

    மறு மார்க்கத்தில் கர்னூல் டவுன் - தூத்துக்குடி சிறப்புரெயில் (06048 ) கர்னூல் டவுனில் இருந்து வருகிற 17-ந் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். இந்த ரெயில்கள் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா, எரக்குண்ட்லா, தாடி பத்திரி, துரோணாச்சலம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    கொல்லம் - திருச்சி சிறப்பு ரெயில் (06056) கொல்லத்தில் இருந்து வருகிற 13-ந் தேதி இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.40 மணிக்கு திருச்சி சென்று சேரும். மறு மார்க்கத்தில் திருச்சி -கொல்லம் ரெயில்வே தேர்வு வாரிய சிறப்பு ரெயில் (06055) திருச்சியில் இருந்து வருகிற 17-ந் தேதி இரவு 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.15 மணிக்கு கொல்லம் போய் சேரும்.

    இந்த ரெயில்கள் திருவனந்தபுரம், நாகர்கோ வில் டவுன் , திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு விரைவில் தொடங்க இருக்கிறது.

    இந்த ரெயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மற்றும் 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும்.

    இந்த தகவலை தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்ட அலுவலகம் தெரி வித்துள்ளது.

    Next Story
    ×