search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கழிவுநீர்-குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசும் தெப்பக்குளம்
    X

    கழிவுநீர்-குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசும் தெப்பக்குளம்

    • கழிவுநீர்-குப்பைகள் தேங்கி தெப்பக்குளம் துர்நாற்றம் வீசுகிறது.
    • நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மதுரை

    மதுரை நகரின் அடை யாளங்களில் ஒன்றாகவும் முக்கிய சுற்றுலா இடமாக வும் உள்ள மாரியம்மன் தெப்பக்கு ளத்தில் கடந்த 2 வருடங்களாக வைகை ஆற்றில் இருந்து பனையூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு நிரப்பப்படுகிறது. இதன் காரணமாக ஆண்டின் பெரும்பாலான நாட்களில் தண்ணீர் நிரம்பி தெப்பக் குளம் காணப்படுகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

    இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. இதனால் தெப்பக்குளத்தில் வேகமாக தண்ணீர் குறைய தொடங்கியது. இந்த நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக இந்த மாதம் முதல் வாரத்தில் மதுரை மாவட்டத்தில் கோடை மழை கொட்டி தீர்த்தது. மேலும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.இதனை பயன்படுத்தி மாரியம்மன் தெப்பக் குளத்தில் தண்ணீர் முழுவ துமாக நிரப்பப்பட்டது. ஆனால் தற்போது அந்த தண்ணீர் மாசடைந்துள்ளது. மேலும் குப்பைகளும், கழிவுநீரும், பிளாஸ்டிக் பொருட்களும் தெப்பக்குளத்தில் கலந்துள்ளன. இதன் காரணமாக தற்போது கடும் துர்நாற்றம் வீசுகிறது.

    தெப்பக்குளத்தை சுற்றி காலை வேளையில் ஏராள மானோர் நடைபயிற்சியில் ஈடுபடுகின்றனர். மாலை வேளைகளில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் அமர்ந்து பொழுதுபோக்கி செல்கின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் வந்து செல்கின்றனர். தெப்பக்கு ளத்தின் அருகில் பள்ளி, கல்லூரிகளும் உள்ளன. இந்த நிலையில் மதுரை நகரில் ஒரே பொழுதுபோக்கு இடமாக உள்ள மாரியம்மன் தெப்பக்கு ளத்திற்கு வரும் பொதுமக்கள் துர்நாற்றம் காரணமாக அதிருப்தி அடைந்து ள்ளனர். மேலும் கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே தெப்பக் குளத்தில் உள்ள கழிவுகளை அகற்றி தண்ணீரை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×