search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்கள் குறைதீர்க்கும்  முகாம்
    X

    பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

    • மதுரை மாநகராட்சி மண்டலம் 5-ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி தலைமையில் நடக்கிறது.
    • மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது மக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய் கிழமையில் வார்டு மறு வரையறை செய்யப்பட்ட 5 மண்ட லங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

    அதன்படி வருகிற 18-ந் தேதி (செவ்வாய்கிழமை) திருப்பரங்குன்றம் நகர்ப்புற சுகாதார நிலையம் அருகில் (தியாகராசர் பொறியியல் கல்லூரி செல்லும் வழி) உள்ள மதுரை மாநகராட்சி மண்டலம் 5 (மேற்கு) அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற உள்ளது.

    மண்டலம் 5 (மேற்கு) உட்பட்ட வார்டு பகுதிகள்: வார்டு எண்.71 மாடக்குளம், 72 முத்துராமலிங்கபுரம், 73 முத்துப்பட்டி அழகப்பன் நகர் மெயின் ரோடு, 74 பழங்காநத்தம், 78 கோவலன் நகர், டி.வி.எஸ்.நகர் மெயின் ரோடு, 79 தென்னகரம், ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு, 80 வீரகாளியம்மன் கோவில் தெரு, 81 ஜெய்ஹிந்துபுரம், 82 சோலையழகுபுரம், 83 எம்.கே. புரம், 84 வில்லாபுரம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, 91 மீனாட்சி நகர் அவனியாபுரம், 92 பாம்பன் சுவாமி நகர், 93 பசுமலை, 94 திருநகர், 95 சவு பாக்யாநகர், 96 ஹார்விப் பட்டி, 97 திருப்பரங்குன்றம், 98 சன்னதி தெரு, திருப்ப ரங்குன்றம், 99 பாலாஜி நகர், 100 அவனியாபுரம் அருப்புக்கோட்டை மெயின் ரோடு ஆகிய பகுதிகள்.

    இந்த குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

    இந்த தகவல் மதுரை மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×