என் மலர்
உள்ளூர் செய்திகள்

லட்சுமி கணபதி கோவில் கும்பாபிஷேகம்
- மேலூர் ஜோதி நகரில் லட்சுமி கணபதி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- காப்புகட்டிய பக்தர்கள் கும்பத்தை சுமந்து கோபுரத்திற்கு கொண்டு சென்றனர்.
மேலூர்
மேலூர் ஜோதி நகரில் லட்சுமி கணபதி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 2-ந்தேதி விழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி உள்பட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து முதல் கால யாக பூைஜ, 2-ம் கால யாக சாலை பூஜை, 3-ம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். காப்புகட்டிய பக்தர்கள் கும்பத்தை சுமந்து கோபுரத்திற்கு கொண்டு சென்றனர். யாக சாலையை சுற்றி வந்து திருப்புவனம் ராஜ.சொக்கலிங்கம் சிவாச்சாரியார்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தத்தை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அப்போது வாகனத்தில் கருடன் வட்டமிட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து பிள்ளையாருக்கு மஹா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோவில் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழா ஏற்பாட்டினை ஜோதிநகர் மற்றும்கும்பாபிஷேக திருப்பணிக்குழு நிர்வாகிகள், இளைஞர்கள் மற்றும் ஜோதி நகர் பொதுமக்கள் செய்திருந்தனர்.






