என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார தொடக்க விழா
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார தொடக்க விழா நடந்தது.
- உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை கடச்சனேந்தலில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் அறக்கட்டளை இணைந்து நடத்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் மதுரை கிழக்கு மண்டல மகளிரணி சார்பில், மனித உரிமை ஆர்வலரும், மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவருமான சென்னை காஜா தலைமையில் நடந்தது.
மாவட்ட அமைப்பாளர் நந்தகுமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நித்யானந்தம், கிழக்கு மண்டல அமைப்பாளர் லூர்துராஜா முன்னிலை வகித்தனர். கிழக்கு மண்டல மகளிரணி அமைப்பாளர் தவமணி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மதுரை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசேகரன் பங்கேற்று விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார். விழாவில் பொதுமக்களுக்கு மஞ்சள் துணிப்பையும், இனிப்பும் வழங்கப்பட்டது. இதில் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






