search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றாவிடில் போராட்டம்
    X

    சுங்கச்சாவடி எதிர்ப்புக்குழு கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

    கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றாவிடில் போராட்டம்

    • கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றாவிடில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • பதட்டமான சூழல் உருவாகும் சமயத்தில் மட்டும் மாவட்ட கலெக்டர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளூர் மக்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என சுங்கச்சாவடி உறுதி கூறும்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் சுங்கச்சாவடி அமைந்து உள்ளது. திருமங்கலம் நகராட்சியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த சுங்கச்சாவடி உள்ளதால் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    ஆனால் உள்ளூர் மக்களிடம் ஊழியர்கள் சுங்க கட்டணம் கேட்பதால் இங்கு அடிக்கடி மோதல் ஏற்படும் சூழல்களும் உருவாகி வருகின்றன. பதட்டமான சூழல் உருவாகும் சமயத்தில் மட்டும் மாவட்ட கலெக்டர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளூர் மக்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என சுங்கச்சாவடி உறுதி கூறும்.

    ஆனால் சில நாட்களிலேயே அந்த உறுதி மொழியை காற்றில் பறக்கவிட்டு மீண்டும் சுங்க கட்டணம் கேட்பார்கள்.தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் சுங்கச்சாவடியை வேறு இடத்திற்கு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் திருமங்கலம் மற்றும் கப்பலூர் பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் 2 ஆண்டுகளுக்குரிய சுங்க கட்டணத்தை செலுத்த வேண்டுமென வக்கீல் மூலம் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு சுங்க நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ஒவ்வொருவருக்கும் ரூ. 30 ஆயிரத்திலிருந்து, ரூ. 3 லட்சம் வரையிலும், கப்பலூர் தொழிற் பேட்டை வாகனங்களுக்கு ரூ. 1கோடி வரையிலும், தமிழ்நாடு அரசு போக்கு வரத்து துறைக்கு ரூ‌.28கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் வாகன ஓட்டிகளிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கி யுள்ளது.

    இதையடுத்து சட்ட விரோதமாக அமைக்க ப்பட்ட கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி திருமங்கலம் உசிலம்பட்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.இதில் திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, பேரையூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான வாகன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதியின் போது கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த தமிழக முதல்வர் உடனடியாக சுங்கச்சாவடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றும் வரை திருமங்கலம், கப்பலூர், டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதி மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×