search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 வாலிபர்கள் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு
    X

    2 வாலிபர்கள் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு

    • போலீசார் சுட்டதில் உயிரிழந்த 2 வாலிபர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    • உதவி காவல் ஆணையாளர் வெள்ளத்துரை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

    மதுரை

    மதுரையில் உள்ள மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் செயல் இயக்குநரும், மூத்த வக்கீலுமான ஹென்றி டிபேன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை தெப்பக்குளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராமநாதபுரம் சாலையில் அமைக்கப் பட்டிருந்த சோதனைச் சாவடி அருகே, கடந்த 2010-ல் அப்போதைய காவல் உதவி ஆணையாளர் வெள்ளத்துரை துப்பாக்கி யால் சுட்டதில், கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த கவியரசு (30), ஓடக்கரை பகுதியைச் சேர்ந்த முருகன் (34) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

    இதுகுறித்து கோட்டா ட்சியர் நடத்திய விசார ணையில், உதவி ஆணையாளர் வெள்ளத்துரை, தற்காப்பு க்காக துப்பாக்கிச் சூடு நடத்தினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை என்று அறிக்கை அளித்தார்.

    இதனிடையே, உயிரிழந்த முரு கனின் தாய் குருவம்மாள், காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு புகார் மனு அனுப்பினார். அந்த மனு ஏற்கப்பட்டு காவல் உதவி ஆணையாளர் வெள்ளத்துரை, அவருடன் பணியாற்றிய உதவி ஆய்வாளர் தென்னரசு, தலைமைக் காவலர் கணேசன், காவலர் ரவீந்திரன் ஆகியோர் மீது விசாரணை நடத்தப்பட்டது.

    மனுதாரரான குருவம்மாள் சார்பில் வக்கீல் சின்ன ராஜா, மக்கள் கண்காணிப்பகத்தின் வக்கீல்கள் பாண்டியராஜன், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் வாதாடினர்.

    இதையடுத்து, உயிரிழந்த கவியரசு, முருகன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரி மைகள் ஆணையம் உத்தரவிட் டது. இந்தத் தொகையில், உதவி ஆணையாளர் வெள்ளத்துரையிடம் இருந்து ரூ. 3 லட்சம், உதவி ஆய்வாளர் தென்னரசு, தலைமைக் காவலர் கணேசன் ஆகியோரிடம் இருந்து தலா ரூ.1.50 லட்சத்தை சட்டரீதியாக பெற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

    உதவி ஆணையாளர் வெள்ளத்துரை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்தனர். அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    துப்பாக்கி சூட்டில் இறந்த முருகனின் தாய் குருவம்மாள், வக்கீல்கள் சின்னராஜா, பாண்டியராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×