என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுரையில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் நடந்தது.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
- கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
- தேநீருக்கு பதிலாக சிறுதானிய கஞ்சி வழங்கப்பட்டது.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பாக பேசினர். சிலர் மனுவாக அதிகாரிகளிடம் கொடு த்தனர். கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகளுக்கு வழக்கமாக
தேநீர் தரப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை விவசாயிகள் மத்தியில் மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி அவர்க ளுக்கு தேனீருக்கு பதிலாக சிறுதானிய கஞ்சி (மில்லட் பால்) வழங்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கலெக்டர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில்,
மக்கா சோளம் மற்றும் சிறுதானிய சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, மதிப்புகூட்டப்பட்ட பொருட்களை உருவாக்கும் எண்ணம் வர வேண்டும் என்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம். அடுத்தபடியாக சிறுதானிய விவசாயத்தை மேம்படுத்துவது தொடர்பாக முனைப்புகளை செய்து வருகிறோம். அதற்கான முதல் முயற்சி தான் இது என்று தெரிவித்துள்ளனர்.அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை கலெக்டர் அனீஷ் சேகர் பாராட்டினார்.