search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரிச்சுமைகளை பல மடங்கு உயர்த்திய தி.மு.க. அரசு
    X

    பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

    வரிச்சுமைகளை பல மடங்கு உயர்த்திய தி.மு.க. அரசு

    • வரிச்சுமைகளை பல மடங்கு உயர்த்திய தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளனர்.
    • தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, தி.மு.க. இதுவரை செயல்படுத்தவில்லை.

    மதுரை

    மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் பகுதியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது-

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தார் மடிக்கணினி, தாலிக்கு தங்கம், பெண்களுக்கு இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொடுத்து தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றினார்.

    மதுரை இன்று வளர்ந்த மாவட்டமாக இருப்பதற்கு காரணம் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் தான். அதை திறம்பட செய்து காட்டியவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் கடந்து விட்டது. ஆனால் இதுவரை மக்களுக்கு எந்த வித திட்டங்களையும் கொண்டு வரவில்லை.

    நம்முடைய திட்டங்களை தான் செயல்படுத்தி வருகிறார் மு.க. ஸ்டாலின். மதுரையில் இருக்கும் இரு அமைச்சர்களும் எந்தவித திட்டங்களையும் கொண்டு வரவில்லை. தேர்தல் வாக்குறுதி யாக கொடுத்த குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, அரசு ஊழியர்களின் பழைய பென்சன் திட்டம் உள்ளிட்ட எந்த ஒரு திட்டத்தையும் தி.மு.க. இதுவரை செயல்படுத்தவில்லை.

    விடியல் ஆட்சி தருகிறேன் என சொல்லிவிட்டு ஸ்டாலின் விடியா ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார்.மின்சார கட்டணம், பால்விலை உயர்வு, சொத்துவரி என பல மடங்கு வரிகளை உயர்த்தி சாதனை படைத்துள்ளது தி.மு.க. அரசு.இதற்கு தக்க பாடம் புகட்ட தமிழக மக்கள் தயாராக உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×