search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2ஜி வழக்கில் விரைவில் இறுதி தீர்ப்புக்கு வாய்ப்பு-பா.ஜ.க. நிர்வாகி பேட்டி
    X

    திருமங்கலத்தில் நிருபர்களுக்கு பா.ஜ.க. தேசிய நிர்வாகி ஆசிர்வாதம் ஆச்சாரி பேட்டியளித்தார். அருகில் எம்.எஸ்.ஷா உள்ளார்.

    2ஜி வழக்கில் விரைவில் இறுதி தீர்ப்புக்கு வாய்ப்பு-பா.ஜ.க. நிர்வாகி பேட்டி

    • 2ஜி வழக்கில் விரைவில் இறுதி தீர்ப்புக்கு வாய்ப்புள்ளது என்று பா.ஜ.க. நிர்வாகி பேட்டியளித்துள்ளார்.
    • மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜாஜி சிலை முன்பு மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க. தேசிய நிர்வாகி ஆசிர்வாதம் ஆச்சாரி கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    2ஜி வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கீழ்அமர்வு நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும், டெல்லி ஐகோர்ட்டில் மிக விரைவில் 2ஜி மேல்முறை யீட்டு வழக்கு தினந்தோறும் விசாரிக்கப்பட உள்ளது. அப்போது 2ஜி வழக்கில் சம்பந்தப்பட்ட எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத் தப்படுவார்கள்.

    சி.பி.ஐ. சார்பில் அந்த வழக்கு தினமும் விசாரிக்கப்படும் சிறப்பு வழக்காக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள னர். அது கண்டிப்பாக நடக்க வாய்ப்புள்ளது இன்னும் 6-7 மாதத்தில் 2ஜி வழக்கு இறுதி தீர்வை நோக்கி நகரும். அப்போது வழக்கில் சம்பந்தப்பட்ட வர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வர வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உடன் கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம் மாவட்டத் தலைவர் சசிகுமார் பொருளா தாரப் பிரிவு மாநில தலைவர் அன்னை பாத்திமா எம்.எஸ்.ஷா ஊடகப்பிரிவு காளிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×