search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாட்டை தலைநிமிரச்செய்யும் சமூகநீதிக்கான பட்ஜெட்: பசும்பொன் பாண்டியன்
    X

    தமிழ்நாட்டை தலைநிமிரச்செய்யும் சமூகநீதிக்கான பட்ஜெட்: பசும்பொன் பாண்டியன்

    • தமிழ்நாட்டை தலைநிமிரச்செய்யும் சமூகநீதிக்கான பட்ஜெட் என பசும்பொன் பாண்டியன் பாராட்டு தெரிவித்தார்.
    • மதுரை மெட்ரோ ெரயில் திட்டம் ரூ. 8,500 கோடியில் செயல்படுத்தும் என அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்க றிஞர் பசும்பொன் பாண்டியன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது-

    தமிழ்நாடு அரசின் நிதிப்பற்றாக்குறை கடந்தாண்டு ரூ.62ஆயிரம் கோடியாக இருந்த நிலையில் தற்போது அதன் மதிப்பு ரூ.30கோடியாக குறைக்கப்பட்டிருப்பதும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் ரூ. 8,500 கோடியில் செயல்படுத்தும் என அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

    குறிப்பாக குடும்பத்தலை விகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மத்தியில் பெரும் வர வேற்பை பெற்றிப்பதோடு பெண்கள் மகிழ்ச்சி கடலில் உள்ளார்கள். மேலும் ஏரி, குளங்கள் சீரமைப்பு, பன்னோக்கு மருத்துவ மனைகள், 16.500மெகாவாட் புதிய மின்திட்டங்கள் என அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கான திட்டங்க ளை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்,

    பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.1500கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் 18 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்படும் வகையில் ரூ. 500கோடி மதிப்பில் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுப் படுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    வருங்காலங்களில் மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு போன்றவைகளால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது என்பதை தி.மு.க. அரசு எதிர்காலத்தில் சரி செய்யும் என்று நம்புகிறேன்.

    இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக முன்னேற்றப் பாதையில் பீடுநடை போடுவதை நிதிநிலை அறிக்கை உறுதி செய்திருக்கிறது. இது தமிழ்நாட்டை தலை நிமிரச்செய்யும் சமூக நீதிக்கான பட்ஜெட்டாகும்.

    தி.மு.க.வின் திராவிட முன்மாதிரி அரசு உருவாக்கியுள்ள இந்த நிதிநிலை அறிக்கையை தயாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜ னுக்கும் எனது சார்பாகவும், அ.தி.ம.மு.க. சார்பாகவும் பாராட்டுக் களையும், வாழ்த்துக்க ளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×