என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சிறுமிகளை ஏமாற்றி திருமணம் செய்த சிறுவன்-வாலிபர் கைது
  X

  சிறுமிகளை ஏமாற்றி திருமணம் செய்த சிறுவன்-வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிறுமிகளை ஏமாற்றி திருமணம் செய்த சிறுவன்-வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
  • கடந்த 11-ந் தேதி வீட்டில் இருந்து வெளியேறியதாகவும், பின்னர் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றதாகவும் தெரிவித்தார்.

  மதுரை

  மதுரை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ், உதவி கமிஷனர் அக்பர்கான், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பி.முகைதீன், தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கீதாதேவி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

  இந்த தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்கள் நகர் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.

  அப்போது அழகர்கோவிலுக்கு செல்லும் வழியில் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் அதில் வந்த வாலிபர் மற்றும் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுமி, வாலிபருடன் ஏற்பட்ட பழக்கத்தில் கடந்த 11-ந் தேதி வீட்டில் இருந்து வெளியேறியதாகவும், பின்னர் கொடைக்கா னலுக்கு சுற்றுலா சென்ற தாகவும் தெரிவித்தார்.

  விசாரணையில் அந்த வாலிபரும், சிறுமியும் கேரள மாநிலம் கண்ணூர் சென்று அங்குள்ள ஒரு ேகாவிலில் திருமணம் செய்துள்ளனர் என்பதும், அதன் பிறகு இருவரும் சிறுமியின் தோழி வீட்டில் தங்க முயன்றபோது அவர்கள் அனுமதிக்காததால் அழகர்கோவில் வந்ததும் தெரியவந்தது. பிடிபட்ட வாலிபர் மேலத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர். இவரும் 17 வயது சிறுவன் என்பது குறிப்பிடத்தக்கது.

  சிறுவனிடமிருந்து இருந்து சிறுமியை மீட்ட முத்துப்பட்டி அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, வலுக்கட்டாயமாக திருமணம் செய்தது உள்பட பல்வேறு பிரிவுகளில் சிறுவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

  இதேபோல் தனிப்படை போலீசார் கள்ளந்திரி பகுதியில் சோதனை செய்தபோது அந்த வழியாக ஜோடியாக வந்த ஒரு வாலிபரையும், சிறுமியையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது.

  விசாரணையில் அந்த வாலிபர் செல்லூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் யுவராஜ் (வயது 19) என்பதும், அவருடன் வந்தவர் 16 வயது சிறுமி என்பதும் தெரியவந்தது. சிறுமியை போலீசார் மீட்டனர்.

  போலீசார் நடத்திய விசாரணையின்போது அந்த சிறுமி கூறியதாவது:-

  நான் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். தந்தை இறந்துவிட்டதால் தாய் மறுமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நான் யுவராஜை காதலித்தேன். எங்களின் காதலுக்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் நண்பர்களுடன் கொடைக்கானல் செல்ல திட்டமிட்டிருந்தோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இதனைத்தொடர்ந்து சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய யுவராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமி முத்துப்பட்டி அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

  Next Story
  ×