என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் முதல்-அமைச்சருக்கு பாராட்டு
    X

    திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் முதல்-அமைச்சருக்கு பாராட்டு

    • பெண்களுக்கு மாதம் ரூ.1000 திட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் முதல்-அமைச்சருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • ஆணையாளர் ராமமூர்த்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தார்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய தலைவர் வேட்டையன் தலைமை தாங்கி பேசும்போது, தமிழகத்தில் ஏழை பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தி.மு.க. ஆட்சி வந்த 2 ஆண்டுகளில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

    நிலையூர் முருகன் (அ.தி.மு.க.): ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமப் பகுதிகளில் குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த இணைப்புகளில் தற்போது வரை தண்ணீர் கிடைக்கவில்லை. மேலும் பல இடங்களில் அவை தரம்இன்றி பழுதாக உள்ளது.

    தென்பழஞ்சி சுரேஷ் (தி.மு.க.): கிராமப் பகுதிகளில் சேரும் குப்பைகள் கண்மாய்களிலும் பொது இடங்களிலும் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மதுரை மாநகராட்சி வெள்ளக்கல் பகுதியில் குப்பைகளை சேகரிப்பது போல திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய த்திற்கு உட்பட்ட 38 ஊராட்சிகளில் சேரும் குப்பைகளை ஒரே இடத்தில் சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆணையாளர் ராமமூர்த்தி பிரச்சினைகள் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தார்.

    Next Story
    ×