search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளால் விபத்து

    • மதுரை சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகளால் விபத்து நடக்கும் அபாயம் ஏற்படுகிறது.
    • உயிர்பலி ஏற்படும் முன் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

    மதுரை

    தமிழகத்தில் உள்ள முக்கிய சாலைகளில் மாடுகளின் ஆக்கிரமிப்பால் அடிக்கடி உயிர் இழப்புகள் ஏற்படுவதாக நாள்தோறும் செய்திகள் வெளி யாகி வருகிறது. சென்னையில் மட்டும் கடந்த மாதம் மாடுகள் முட்டியதில் பெண்கள் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். நாகப்பட்டினத்தில் நேற்று சாலையில் சுற்றிதிரிந்த மாடு முட்டியதில் கீழே விழுந்த ஒருவர் அரசு பஸ்சின் டயரில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

    2-வது பெரிய மாநகராட்சி யாக உள்ள மதுரையில் சாலை கள் படுமோசமாக உள்ளது. தற்போது மழை காரணமாக இருப்பதால் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் சாலைகள் காணப்படுகிறது. இந்த சாலையில் வாகன ஓட்டிகள் உயிரை பணயம் வைத்து பயணம் செய்து வருகின்றனர்.

    இதுபோதாதென்று சாலைகளில் கால்நடைகளின் ஆக்கிரமிப்பும்நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.மதுரை நகரில் மாடுகள் வளர்ப்போர் தங்களது இஷ்டத்துக்கு மாடுகளை முக்கிய சாலைகள், தெருக்களில் அவிழ்த்து விடு கின்றனர்.

    அவைகள் சர்வ சாதாரணமாக சாலைகளில் அமர்ந்தும், குறுக்கே இடைமறித்து நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் செல்லமுடியாமல் அவதி அடைகின்றனர்.

    பெரியார் பஸ் நிலையம், 4 மாசி வீதிகள், 4 வெளிவீதிகள், காமராஜர் சாலை, வில்லா புரம்-அவனியாபுரம் ரோடு, திருப்ப ரங்குன்றம், கைத்தறி நகர், காளவாசல், பை-பாஸ் ரோடு களில் மாடுகள் அணிவகுத்து செல்வதை அடிக்கடி பார்க்க முடியும்.

    குப்பை தொட்டிகளை தேடி செல்லும் மாடுகள் சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகிறது. மேலும் நடுரோட்டி லேயே மாடுகள் சண்டையிடு வதும், சில நேரங்களில் மிரள் கின்றன.இதனால் வாகனங்கள் மீது மாடுகள் மோதி விபத்தை ஏற்படுத்துகின்றன. மதுரைமாவட்ட நீதிமன்றத்தில் இருந்து மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலை யில் ஆயிரக்கணக்கான வாக னங்கள் சென்று வருகின்றன. வாகன நெரிசல் மிகுந்த இந்த சாலையில் மாடுகள் முகாமிடு கின்றன. பல மணிநேரம் சாலை யில் அசைபோட்டவாறு நிற்கின்றன. இதனால் வாகன ஒட்டிகள் தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக பூமார்க்கெட், சிக்னல் பகுதிகளில் மாடுகளின் தொல்லையால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. வேகமாக வரும் வாகனங்கள் மாடுகளின் இடையூறால் நிலைகுலைந்து தடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சென்னையில் மாடுகளை சாலைகளில் அவிழ்த்து விடுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆனால் மதுரை மாநகராட்சியில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கா மல் மெத்தனம் காட்டி வரு கின்றனர். சாலைகள் மற்றும் பொது இடங்களில் மாடுகளில் பால் கறந்து விற்பனை செய்யும் உரிமையாளர்கள் அதனை கொட்டகையில் அடைக்காமல் ரோட்டில் விடுகின்றனர். அவைகள் சிறிய தெருக்கள் முதல் முக்கிய சாலை வரை ஆக்கிரமித்து பொதுமக்க ளுக்கு தொல்லை ஏற்படுத்தி வருகிறது. எனவே மதுரை நகரில் மாடுகள் வளர்ப்போரை கணக்கெடுத்து அவர்கள் மாடுகளை ரோட்டில் விடுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனையும் மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாடுகளை வெளியே விடும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, மாடுகளையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்றனர்.

    பை-பாஸ் ரோட்டில் மாட்டு கொட்டகைகள்

    மதுரை பை-பாஸ் ரோடு பொன்மேனி சர்வீஸ் சாலைகளை மாடு வளர்ப்போர் சிலர் கொட்டகையாக பயன்படுத்தி மாடுகளுக்கு தீணிகள் மற்றும் தண்ணீர் வைத்து அங்கேயே பால் கறந்து விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் மழை காலங்களில் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இதில் தனி கவனம் செலுத்தி சாலைகளில் மாடுகளை வளர்ப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×