search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.74.44 கோடி கடன் தள்ளுபடி - கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
    X

    தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.74.44 கோடி கடன் தள்ளுபடி - கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

    • சுழல்நிதி கடனாக 516 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ. 77.40 லட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் புதியதாக நகர்ப்புற பகுதிகளில் 548 மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார்.

    அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 2420 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.74.44 கோடி கடன்தொகை தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டு ள்ளது. மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் மே 2021-2022 மற்றும் 2022-2023-ம் ஆண்டில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 635 புதிய மகளிர் சுய உதவிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் தலைமையிலான அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற நாளான 07.05.2021 முதல் 31.05.2023 வரை சுழல்நிதி கடனாக 516 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ. 77.40 லட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. சமுதாய முதலீட்டு நிதியாக 796 குழுக்களுக்கு ரூ.661.80 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. நலிவுற்ற தன்மை குறைப்பு நிதியின் கீழ், 154 நபர்களுக்கு ரூ.38.50 லட்சம் கடனுதவிகள் வழங்கப்ப ட்டுள்ளது.

    வங்கிக்கடன் இணைப்பு நிதியாக 26623 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1390.05 கோடி வங்கி கடன் பெற்றுதரப்பட்டு ள்ளது. வங்கி பெருங்கடன் வழங்குவதில் இதுவரை 49 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.1869.90 லட்சம் மதிப்பிலான கடனு தவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் புதியதாக நகர்ப்புற பகுதிகளில் 548 மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களை ஊக்குவிக்கும் வகையில் மகளிர் குழு உறுப்பினர்கள் சுய தொழில் தொடங்க ஏதுவாக கடனுதவிகள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×