search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    த.மா.கா.வுக்கு வருங்காலம் வசந்த காலமாக இருக்கும்- தொண்டர்களுக்கு ஜி.கே.வாசன் கடிதம்
    X

    த.மா.கா.வுக்கு வருங்காலம் வசந்த காலமாக இருக்கும்- தொண்டர்களுக்கு ஜி.கே.வாசன் கடிதம்

    • இயக்கத்தினரின் குடும்ப இன்ப துன்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதும் போற்றுதலுக்குரியது.
    • மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இயக்கமாக த.மா.கா செயல்படுகிறது.

    சென்னை:

    த.மா.கா. தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் முடிந்து 11-வது ஆண்டு தொடங்கி உள்ளது. இதையொட்டி த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தொண்டர்களுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) நவம்பர் 28, 2014 ல் துவக்கப்பட்டு 10 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து 11-ம் ஆண்டில் அடி எடுத்து வைப்பது மகிழ்ச்சிஅளிக்கிறது.

    பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் ஆசியோடு இயக்கம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை இயக்கத்தின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை தொடர்ந்து இயக்கத்திற்காக, மக்களுக்காக உழைத்து வருவது இயக்கத்திற்கு பலம் சேர்க்கிறது.

    குறிப்பாக இயக்கத்தினர் இயக்கம் வளர வேண்டும் என்பதற்காக கடந்த 10 ஆண்டுகளாக இயக்கப் பணிகள் மேற்கொண்டதும், இயக்கத்தினரின் குடும்ப இன்ப துன்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதும் போற்றுதலுக்குரியது.

    பொது மக்களின் அவசர, அவசிய தேவைகளை அறிந்து அவர்களுக்கு துணை நிற்கும் வகையில் பணிகள் செய்வதும், தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதும் பெருமைக்குரியது. மேலும் விவசாயிகள், தொழிலாளர்கள், எஸ்.சி.எஸ்.டி, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இயக்கமாக த.மா.கா செயல்படுகிறது

    இப்போது 11-ம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதற்கு காரணம் இயக்கத்தின் ஒவ்வொருவரின் கடின உழைப்பே. இந்நிலையில் த.மா.கா.வினர் தொடர்ந்து இயக்கம் வளர வேண்டும் என்பதற்காக உறுப்பினர் சேர்ப்பு பணியில் மிகச் சிறப்பாக ஈடுபட்டு வருவதும் பாராட்டுக்குரியது.

    ஒவ்வொருவருக்கும் பெருந்தலைவர், மக்கள் தலைவர் ஆசியோடு எனது மனம் நிறைந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இயக்கத்திற்கும், இயக்கத்தினருக்கும் வருங்காலம் வசந்தகாலமாக அமையும் என்ற உறுதியோடு உங்களில் ஒருவராக நானும் தொடர்ந்து கடினமாக உழைத்து வளமான தமிழகத்தையும், வலிமையான பாரதத்தையும் உருவாக்குவோம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    Next Story
    ×