என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நத்தத்தில் பொருட்கள் வாங்குவது போல் நடித்து கடையில் எல்.இ.டி. டி.வி. திருடிய மர்ம நபர்
    X

    டி.வி.யை மர்ம நபர் திருடிச் செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

    நத்தத்தில் பொருட்கள் வாங்குவது போல் நடித்து கடையில் எல்.இ.டி. டி.வி. திருடிய மர்ம நபர்

    • கடைக்கு வந்த நபர் கடையின் முன்னால் இருந்த 20 ஆயிரம் மதிப்புள்ள புதிய எல்.இ.டி. டி.வி.யை திருடிச் சென்றார்.
    • கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டுப்பட்டியை சேர்ந்தவர் ராஜன் (வயது 35). இவர் நத்தம் - அசோக்நகர் பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.

    இவரது கடைக்கு 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் புதிய டி.வி.க்களின் விலையை விசாரித்து உள்ளார். உடனே கடைக்காரர் குடோனில் உள்ள டி.வி.க்களை பார்க்குமாறு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென குடோனில் இருந்து கடைக்கு வந்த நபர் கடையின் முன்னால் இருந்த 20 ஆயிரம் மதிப்புள்ள புதிய எல்.இ.டி. டி.வி.யை திருடிச் சென்றார். இந்த காட்சி பர்னிச்சர் கடையில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது.

    இதனால் அதிர்ச்சியடைந்த ராஜன் திருட்டு சம்பவம் குறித்து நத்தம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து மர்ம நபரை தேடி வருகின்றார்.

    Next Story
    ×