search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி ஸ்பிக், பாரதி நகர் கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகவிழா நடைபெற்றபோது எடுத்தபடம்.

    தூத்துக்குடி ஸ்பிக், பாரதி நகர் கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • கருமாரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • தெய்வங்களுக்கு விசேஷ அபிஷேகங்கள்,சிறப்பு அலங்காரங்கள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்பிக் பாரதிநகர், கரு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகவிழா இன்று காலை நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம் புண்மை யாக வாசனம், மகாகணபதி ஹோமம் மற்றும் வாஸ்து பூஜை பிரவேசபலி ஜைன வாசம், பூர்ணாகுதி,யந்திர ஸ்தாபனம்,விக்கிரக பிரதிஷ்டை ஆகிய நிகழ்ச்சி கள் நடை பெற்றது.

    இன்று காலை4.30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம் நிகழ்ச்சிக்குப் பின் கடம் புறப்பாடு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கருமாரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் கருமாரியம்மன், பத்ரகாளி யம்மன், முத்தா ரம்மன், துர்க்கையம்மன், முக்திவிநாயகர் மற்றும் ஸ்ரீ நாகராஜா, நாககன்னி ஆகிய தெய்வங்களுக்கு விசேஷ அபிஷேகங்கள்,சிறப்பு அலங்காரங்கள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது,

    தொடர்ந்து பகல் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகர 56-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுயம்பு, ஓட்டப்பிடாரம் தொகுதி சண்முகையா எம்.எல்.ஏ.மற்றும் சுற்று வட்டார பிரமுகர்கள், பாரதிநகர் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×