search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூலூரில் கவுன்சிலர் வீட்டில் நகை, பணத்தை திருடிய குற்றவாளிகளை விரைந்து பிடித்த போலீசாருக்கு பாராட்டு
    X

    சூலூரில் கவுன்சிலர் வீட்டில் நகை, பணத்தை திருடிய குற்றவாளிகளை விரைந்து பிடித்த போலீசாருக்கு பாராட்டு

    • அப்பநாயக்கன்பட்டியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஊராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன் வீட்டில் 22 பவுன் தங்க நகை மற்றும் ரூ.4 லட்சம் திருட்டு போனது.
    • கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    சூலூர்,

    சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஊராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன் வீட்டில் 22 பவுன் தங்க நகை மற்றும் ரூ.4 லட்சம் திருட்டு போனது. இது தொடர்பாக சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். நேற்று அதிகாலை சூலூர் பழைய பஸ் நிலையம் நிலையம் முன்பு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி விசாரித்த போது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    விசாரணையில், அவர்கள் சுந்தராபுரத்தை சேர்ந்த முபாரக் அலி, பீளமேட்டை சேர்ந்த ஜெகநாதன் மற்றும் தொட்டிபாளையம் ஆத்தி குட்டையை சேர்ந்த சரவணன் என்பது தெரியவந்தது.

    மேலும் இவர்கள் அப்பநாயக்கன்பட்டி மற்றும் நீலம்பூர் அண்ணா நகர், மைலம்பட்டி தனம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருடி சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.13 லட்சம் மதிப்பிலான 32 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1.6 லட்சம் பணத்தை மீட்டனர்.

    கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைந்து பிடித்த இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மற்றும் அப்பநாயக்கன்பட்டி பகுதி பொதுமக்கள் பாராட்டினர். தொடர்ந்து அவர், பொதுமக்களிடம் காமிராக்களின் அவசியத்தையும் எடுத்துரைத்தார். இதனை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் தாங்களாக முன்வந்து அவர்களது வீட்டில் காமிராக்களை பொருத்துவதாக வாக்குறுதி அளித்தனர்.

    Next Story
    ×