என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் படிப்பு மையம் 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.
    • அனைத்து படிப்புகளும் பட்டியல் இன மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா ஓசூர் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் மத்திய அரசின் புதுடெல்லி இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் படிப்பு மையம் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.

    இந்த மையத்தில் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் நடப்புக் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    இளங்கலைப் படிப்புகளான பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.எஸ்.டபள்யூ., பி.சி.ஏ., மற்றும் முதுநிலைப் படிப்புகளான எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்.டபள்யூ., எம்.ஏ (சைக்காலாஜி) எம்.சி.ஏ., எம்.பி.ஏ படிப்புகளில் நடப்புக் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    சிறு குறு தொழில் நடத்துபவர்கள் புதிய தொழில் தொடங்கவுள்ள மாணவர்கள் தொழில் முனைவோர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் இளங்கலை படிப்பான எம்.எஸ்.எம்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை இந்த கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் ஆறுமாத சான்றிதழ் படிப்புகளும் இம்மையத்தில் செயல்படுவதால் அதற்கான மாணவர் சேர்க்கையும் நடைப்பெற்று வருகிறது. அனைத்து படிப்புகளும் பட்டியல் இன மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

    பிற மாணவர்கள் மிகமிகக் குறைந்த கட்டணம் செலுத்தினால் போதுமானது. எவ்வித வயது வரம்பும் யாருக்கும் கிடையாது. வீட்டிலிருந்தோ அல்லது பணிசெய்யும் இடத்திலிருந்தோ இப்பாடப் பிரிவுகளில் சேர்ந்து தொலைத்தூர கல்வியாக படிக்கலாம்.

    இதன் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் மத்திய மாநில அரசுகளால் அங்கீரிக்கப்பட்டவை. இதில் சேர்ந்து பயிலும் மாணவர்களுக்கு வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆலோசனை வகுப்புகள் மிகச் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு நடைபெறும்.

    மேலும் விவரங்கள் அறிய இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் சேர்க்கைக்கு https://ignouadmission.samarth.edu.in/ என்ற இணையதள சேவையை பயன்படுத்தி கொள்ளவும் என பி.எம்.சி.டெக் ஒருங்கிணைப்பாளர் சுதாகரன், கைலாசம் ஆகியோர் தெரிவித்தனர்.

    • பிரகாஷ் எம்.எல்.ஏ. இயக்கி வைத்தார்.
    • ரூ10 லட்சம் செலவில் 30 மின்கம்பங்கள் அமைக்க ஏற்பாடு செய்தார்.

    ஓசூர்,

    ஓசூர் பஸ்தி, ஆவ லப்பள்ளி, புனுகன் தொட்டி மற்றும் பாரதியார் நகர் பகுதிகளில் நீண்டகாலமாக குறைந்த மின் அழுத்தம் பிரச்சினை இருந்து வந்தது. இதனால் அந்த பகுதிகளில் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    இது குறித்து ஓசூர் மின் வாரிய செயற் பொறியாளர் கிருபானந்தனிடம் அந்த பகுதி மக்கள், பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தி தருமாறு மனு அளித்தனர்.

    மனுவை பரிசீலித்த செயற்பொறியாளர், இது தொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, அந்த பகுதிகளுக்கு சீரான மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் வாரியத்தின் மூலமாக ரூ10 லட்சம் செலவில் 30 மின்கம்பங்கள் அமைக்க ஏற்பாடு செய்தார்.

    மேலும், ஆவலப்பள்ளி மற்றும் முத்தாலி கிராமத்திற்கு இடையே லிங்க் லைன் போடப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் இந்த லிங்க் லைனை இயக்கி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

    இந்த நிகழ்ச்சியில், மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, ஒசூர் மின்வாரிய செயற்பொ றியாளர் கிருபானந்தன், கவுன்சிலர்கள் சீனிவாசலு, ரவி, கிருஷ்ணப்பா, ஓசூர் ஒன்றிய தி.மு.க.செயலாளர் கஜேந்திர மூர்த்தி, மின் வாரிய உதவி பொறியாளர் மணிவண்ணன், மின் வாரிய அலுவலர்கள், மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • மற்றொரு சம்பவத்தில் அரசு பஸ் டிரைவர் தற்கொலை.
    • உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சரகம் கூத்தூர் ரிங் ரோடு பகுதியை சேர்ந்தவர் நசீர் பாஷா . இவரது மகள் சர்மிளா (வயது 17). கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு பல இடங்களில் சிகிச்சை பார்த்து வந்தனர். ஆனால் சரியாகவில்லை. இதையடுத்து பெங்களூரு சென்று சிகிச்சை பெற்றும் பலன் இல்லை. இதனால் மனம் உடைந்த சர்மிளா விஷம் குடித்துவிட்டார். சேலம் அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சர்மிளா உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல கிருஷ்ணகிரி அருகே குருவரப்பள்ளி போலீஸ் சரகம் முல்லையூரை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் பொன்ராஜ்(45) தனது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குருவரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • நாளை(செவ்வாய்கிழமை) அத்தியாவசிய பராம ரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படு கிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    ஓசூர்,

    ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிரு பானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மின்பகிர் மாவட்டம், ஓசூர் கோட்டத்தை சேர்ந்த உத்தனபள்ளி, தேன்கனிக்கோட்டை மற்றும் ராயக்கோட்டை துணை மின் நிலையங்களில், நாளை(செவ்வாய்கிழமை) அத்தியாவசிய பராம ரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படு கிறது.

    எனவே, நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை உத்தனபள்ளி, அகரம், தியானதுர்க்கம், பீர்ஜேபள்ளி, நாகமங்கலம், நல்லராலபள்ளி, உள்ளு குறுக்கை, போடிச்சிபள்ளி, காடுதானபள்ளி, இரு தாளம், வரகானபள்ளி, டி.கொத்தப்பள்ளி, கெலமங்கலம், அனுசோனை,கடூர், பொம்மதாதனூர், சின்னட்டி, ஜே. காருப்பள்ளி, முகலூர், அக்கொண்டபள்ளி, டி. கொத்தூர், பைரமங்கலம், ஜக்கேரி, பச்சப்பனட்டி, பஞ்சாட்சிபுரம், பேவ நத்தம், அலசட்டி, தேன்க னிக்கோட்டை, நொகனூர், மாரசந்திரம், குந்துகோட்டை அந்தேவனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி, கண்டகானபள்ளி, பால தோட்டனபள்ளி, செட்டிப்பள்ளி, பேளூர், மருதானபள்ளி, தண்டரை, பென்னங்கூர், திம்மசந்திரம், அரசகுப்பம் மற்றும் சுற்று வட்டாரத்திலும், ராயக்கோட்டை நகரம்.

    ஒண்ணம்பட்டி, ஈச்சம்பட்டி, லிங்கம்பட்டி, பி.அக்ரஹாரம், காடுமஞ்சூர், புதுப்பட்டி, கொப்பகரை, தேவனம்பட்டி, கிட்டம்பட்டி, பெட்டம்பட்டி, வேப்ப லம்பட்டி, லட்சுமிபுரம், எஸ்.என்.ஹள்ளி, முத்தம்பட்டி, தின்னூர், காருக்கனஹள்ளி, எருவனஹள்ளி, அளேசீ பம் மற்றும் அதன் சுற்றுப்ப குதிகளில் மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.
    • கிணற்றில் தவறி விழுந்த முருகன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சரகம் தாசிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (70).விவசாயி. சம்பவத்தன்று எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்த முருகன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து அவரது மகள் வித்யாமாலா தந்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஓசூர் அருகே உத்தரப்பள்ளி போலீஸ் சரக பகுதியில் சுப்பிரமணி(50) என்ற விவசாயி ராயக்கோட்டை சாலை வழியாக சென்றபோது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து உத்தரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது.
    • இந்த கோலத்தை பொதுமக்கள் பார்வையிடும் நிகழ்ச்சியை நகராட்சி தலைவர் பரிதாநவாப் தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28&ந் தேதி முதல் ஆகஸ்ட் 10&ந் தேதி வரை 44&வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது.

    இதனை பொதுமக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கையினை எடுத்து வருகிறது.

    இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி செல்பி எடுத்தும், கிருஷ்ணகிரியில் நடந்து வரும் ௨௮-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், நவீன எல்இடி வாகனம்மூ லமாகவும் எனவும் பல்வேறு வகையில் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி நகராட்சி நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் இணைந்து, நகராட்சி அலுவலக வளாகத்தில் ரங்கோலி கோலம் போட்டு பிரபலப்படுத்தப்பட்டது.

    இந்த கோலத்தை பொதுமக்கள் பார்வையிடும் நிகழ்ச்சியை நகராட்சி தலைவர் பரிதாநவாப் தொடங்கி வைத்தார்.

    இதில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சரவணன், சுகாதார அலுவலர் மோகனசுந்தரம், சுகாதார ஆய்வாளர்கள் சந்திரகுமார், உதயகுமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, சுகாதார துப்புரவு மேற்பார்வையாளர் ரேஷ்மா, கவுன்சிலர்கள் பாலாஜி, முகமதுஆஷிப், தேன்மொழி மாதேஷ், சீனிவாசன், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெண்ணேஸ்வரமடம் துணை மின் நிலையத்தில் வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    எனவே காவேரிப்பட்டணம் நகரம், தளிஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுளூர், சந்தாபுரம், நரிமேடு, எர்ரஅள்ளி, போத்தபுரம், பையூர், தேவர்முக்குளம், பெரியண்ணன்கொட்டாய், தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல், ஜெகதாப், வீட்டு வசதி வாரியம், பாளையம், மில்மேடு, இந்திரா நகர், குண்டலப்பட்டி, கத்தேரி, கருக்கன்சாவடி, மேல்மக்கான், தாளாமடுவு, பனகமுட்லு, தளியூர், மோரனஅள்ளி, தொட்டிப்பள்ளம், சாப்பர்த்தி, கொத்தளம், குண்டாங்காடு, போடரஅள்ளி அதை சுற்றி உள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம் மாநகரத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பிரகாஷ், மகராஜகடை போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமனம்.
    • கிருஷ்ணகிரி மாவட்ட குற்ற ஆவண பதிவேடு இன்ஸ்பெக்டர் பழனியப்பன், தர்மபுரி இன்ஸ்பெக்டராக நியமனம்.

    கிருஷ்ணகிரி,

    ஓசூர் சப்- இன்ஸ்பெக்ட ராக பணியாற்றி பதவி உயர்வு பெற்ற பார்த்திபன், ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ராணி, ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், சேலம் மாநகரத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பிரகாஷ், மகராஜகடை போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், கோவை மாநகரில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சரவணன், குருபரப்பள்ளி சர்க்கிள் இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதே போல கிருஷ்ணகிரி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் இன்ஸ்பெக்டராவும் கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சேலம் மாவட்டம் தலைவாசல் இன்ஸ்பெக்டராகவும், கிருஷ்ணகிரி மாவட்ட குற்ற ஆவண பதிவேடு இன்ஸ்பெக்டர் பழனியப்பன், தர்மபுரி இன்ஸ்பெக்டராகவும், மத்திகிரி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் பாகலூர் இன்ஸ்பெக்டராகவும், ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி, மத்திகிரி இன்ஸ்பெக்டராகவும், சேலம் மாவட்டம் ஏற்காடு இன்ஸ்பெக்டர் ரஜினி, சூளகிரி இன்ஸ்பெக்டராகவும், சேலம் மாவட்டம்வீ ரகனூர் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டராகவும் பணியிட மாற்றம் செய்து, சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட்டுள்ளார்.

    • தபால் மூலம் வந்த ஒரு தகவலில் கோடிக்கணக்கான ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக கூறினார்.
    • இதை நம்பி பிரேம்குமார் வெவ்வேறு 4 கணக்குகளில் ரூ.15,60,000 செலுத்தியுள்ளார்.

    கிருஷ்ணகிரி.

    ஓசூர் அருகேயுள்ள அலசநத்தம் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 38). தனியார் நிறுவன ஊழியர்.

    இவருக்கு தபால் மூலம் வந்த ஒரு தகவலில் கோடிக்கணக்கான ரூபாய் பரிசு விழுந்துள்ளதாகவும், அதை பெறுவதற்கு குறிப்பிட்ட வங்கி கணக்குகளில் பணம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதை நம்பி பிரேம்குமார் வெவ்வேறு 4 கணக்குகளில் ரூ.15,60,000 செலுத்தியுள்ளார். ஆனால் அந்த தகவலின்படி பரிசு கிடைக்கவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    இது குறித்து இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • ஓய்வு பெற்ற வங்கி கேசியர் போலீசில் புகார் செய்தார்.
    • 6 மாதமாக முழு வட்டி கட்ட முடியதால் ராயக்கோட்டையில் உள்ள 840 சதுர அடி வீட்டுமனை நிலத்தை எழுதிக்கொடுத்தார்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள உடையாண்டஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது60).இவர் ஓய்வு பெற்ற வங்கி கேசியர். இவர் கடந்த 2011-ம் ஆண்டு ராயக்கோட்டையில் உள்ள ஓசூர் சாலையை சேர்ந்த ஆறுமுகம் (60) என்பவரிடம் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார்.

    அந்த கடனுக்காக மாதமாதம் ரூ.12 ஆயிரம் வட்டி கடந்த 2 ½ வருடம் கட்டி வந்துள்ளார்.

    அதன்பிறகு 6 மாதமாக முழு வட்டி கட்ட முடியதால் ராயக்கோட்டையில் உள்ள 840 சதுர அடி வீட்டுமனை நிலத்தை எழுதிக்கொடுக்க சொல்லி கேட்டதாகவும் ரூ 6,30,000- மதிப்புள்ள வீட்டுமனை இடத்தை 2014 ம் ஆண்டு ஆறுமுகத்திற்கு பத்திரம் பதிவு செய்து கொடுத்தார்.

    பின்னர் ஆறுமுகம் ரூ.60 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார்.

    15 நாள் கழித்து மீண்டும் வந்து மாதமாதம் ரூ.5000 வட்டி கொடுக்க வேண்டும் என்று சந்திரனிடம் கேட்டுள்ளார்.

    இது குறித்து சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் ராயக்கோட்டை போலீசார் கந்துவட்டி தடை சட்டத்தில் வழக்குபதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

    • கேசவமூர்த்தி என்ற கூலித்தொழிலாளி குடும்பத்தகராறில் மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே யுள்ள எஸ்.குருப்பட்டியை சேர்ந்தவர் ரவிரெட்டி (வயது 32). விவசாயி. கடன் தொல்லையால் அவதிப்பட்டுவந்த ரவிரெட்டி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல சூளகிரி அருகே சென்னப்பள்ளியை சேர்ந்த கேசவமூர்த்தி என்ற கூலித்தொழிலாளி குடும்பத்தகராறில் மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சமத்துவம் குறித்து சூளகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • முதல்முறையாக குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் பயன்பெறும் வகையில் இலவச மாதிரித் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது.
    • நேற்று நடந்த தேர்வில் 385 பேர் பங்கேற்று‘ தேர்வு எழுதினர்.

    கிருஷ்ணகிரி,

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யத்தால் குரூப் 4ல் அடங்கிய பணிகளுக்கான தேர்வு வருகிற 24&ந் தேதி நடைபெற உள்ளது.

    இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக பயிற்சி மையம் அமைக்கப்பட்டு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    அத்துடன் குரூப்-4 தேர்வில் இம்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற வேண்டும் என நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக முதல்முறையாக குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் பயன்பெறும் வகையில் இலவச மாதிரித் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி, இந்த மாதிரி தேர்வு நேற்று கிருஷ்ணகிரி அரசு மகளிர்மே ல்நிலைப்பள்ளியில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெற்றது. இந்த மாதிரி தேர்வினை எழுத மாவட்டத்தில் மொத்தம் 550 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் நேற்று நடந்த தேர்வில் 385 பேர் பங்கேற்று' தேர்வு எழுதினர்.

    இந்த தேர்வினை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், இளம் வேலைவாய்ப்பு அலுவலர்கள் சுந்தரம், மோனிஷா ஆகியோர் கண்காணித்தனர். இதற்கான ஏற்பாடுகளை மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் செய்திருந்தார். இந்நிலையில் இந்த தேர்விற்கான வினா மற்றும் விடைத்தாள்களை தேர்வர்களிடமே வழங்கி, சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் இந்த தேர்வு மிகவும் பயனுள்ளதாக தெரிவித்தனர்.

    ×