என் மலர்
கிருஷ்ணகிரி
- தேவர் ஏரி நீர் வரத்து இல்லாமல் பதினைந்து வருடங்களுக்கு மேலாக காய்ந்துள்ளது.
- கிராம மக்கள் ஒன்றிணைந்து விளக்கு எடுத்து மேள, தாளங்களுடன் ஊர்வலமாக வந்து ஏரியில் பூஜை செய்தனர்.
வேப்பனபள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே உள்ள பண்ணப்பள்ளி கிராமத்தில் உள்ள தேவர் ஏரி நீர் வரத்து இல்லாமல் பதினைந்து வருடங்களுக்கு மேலாக காய்ந்துள்ளது.
இந்த நிலையில் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மாதமாக பெய்த கன மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து தேவர் ஏரி நிரம்பி முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
ஏரி முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து பண்ணபள்ளி கிராம மக்கள் ஒன்றிணைந்து விளக்கு எடுத்து மேள, தாளங்களுடன் ஊர்வலமாக வந்து ஏரியில் பூஜை செய்தனர்.
மேலும் ஏரியில் ஆட்டை பலி கொடுத்து பெண்கள் பாட்டு பாடி கொண்டாடினர்.
இதை அடுத்து ஊர் மக்கள் அனைவரும் ஏரியில் விளக்கு தெப்பம் விட்டு வழிப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பண்ணப்பள்ளி மற்றும் தாமண்டரப்பள்ளி கிராமத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
- பல்வேறு இடங்களில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.
- மாணவர்கள் திருச்சியில் இருப்பதாக தகவல் வந்ததை தொடர்ந்து போலீசார் திருச்சி சென்று 3 மாணவர்களையும் மீட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், மகராஜகடை அருகே பி.சி.புதூரை சேர்ந்தவர் திம்மராஜ். இவருடைய மகள் பசவராஜ் (வயது13).
இவர் தாசினாவூர் கிராமத்தில் உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள அரசு உயர்நிலை ப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.
பசவராஜூடன், அதே பள்ளியில் தங்காடி குப்பத்தைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவரின் மகன் ஹரிபிரசாத் (13), குமார் என்பவரின் மகன் ஹரீஷ் (13) ஆகியோர் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு 3 மாணவர்களும் டியூசன் செல்வதாக சென்றவர்கள் மாயமானார்கள். அவரை எங்கு தேடியும் கிடைக்க வில்லை.
இது குறித்து அவர்கள் பெற்றோர் மகராஜகடை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து மாணவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் நாரலப்பள்ளி கூட்டு ரோடு அருகில் கிருஷ்ணகிரி செல்லும் அரசு பஸ்சில் சென்றது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இதில் மாணவர்கள் திருச்சியில் இருப்பதாக தகவல் வந்ததை தொடர்ந்து போலீசார் திருச்சி சென்று 3 மாணவர்களையும் மீட்டனர்.
மாணவர்கள் காணாமல் போய் 36 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி, மகராஜகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் பாராட்டினார்.
- கடந்த சில வாரங்களாக இப்பள்ளியில் சத்துணவுடன் முட்டை வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.
- மழை காரணமாக அவரால் விநியோகிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கடம்பக்குடி பஞ்சாயத்தில் அரசு ஆரம்ப பள்ளி உள்ளது. இப்பள்ளியில் இருளர் இனத்தை சேர்ந்த 5 மாணவிகள்,4மாணவர்கள் உள்பட 9 பேர் பயின்று வருகின்றனர்.
கடந்த 2015-ம் ஆண்டு முதல் இப்பள்ளிக்கென சத்துணவு சமைக்கும் பணியாளர் இல்லை என்று கூறப்படுகிறது.இதனால் அப்பள்ளியில் பயிலும் மனைவி ஒருவரின் தாயான தெய்வானை என்பவர் உணவு சமைத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இப்பள்ளியில் சத்துணவுடன் முட்டை வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து இப்பள்ளியின் சத்துணவு பொறுப்பாளர் தேவராஜம்மா என்பவர் கூறுகையில் , அப்பள்ளிக்கு முட்டை விநியோகிக்க ஒருவரை ஏற்பாடு செய்திருந்தேன். ஆனால் மழை காரணமாக அவரால் விநியோகிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இது குறித்து உரிய விசாரணை நடத்தி தங்கு தடையின்றி முட்டைகள் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.
மேலும் இந்த பள்ளியில் தற்காலிகமாக சமையல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியருக்கு சம்பளம் வழங்குவது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் பேசி தீர்வு காணப்படும் என்றும் கூறினார்.
- மனம் உடைந்த கிருஷ்ணப்பா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
- செல்போனில் ஆன்லைன் விளையாட்டு விளையாடும் பழக்கம் இம்ரானுக்கு இருந்துள்ளதை கண்டித்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி அருகேயுள்ள அனகொண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் (எ ) கிருஷ்ணப்பா. தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில வருடங்களாக உடல் நிலை குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
இதில் மனம் உடைந்த கிருஷ்ணப்பா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி சாரதா தந்த புகாரின்பேரில் மத்திகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல கர்நாடக மாநிலம் ஆனைக்கல் பகுதியை சேர்ந்த இம்ரான் பாஷா (வயது 24) என்பவர் தற்போது கோணேபள்ளியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
செல்போனில் ஆன்லைன் விளையாட்டு விளையாடும் பழக்கம் இம்ரானுக்கு இருந்துள்ளது. இதனை அவரது வீட்டில் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த இம்ரான் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- போக்குவரத்து ஆர்.டி.ஓ. துரைசாமி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
- ஆம்னி பஸ் உரிமையாளர் சிராஜ் எம்.நாயர் , டிரைவர்கள் லாலுமோஹனன், சஞ்சீவ் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
ஓசூர் சிப்காட் பகுதியில் போக்குவரத்து ஆர்.டி.ஓ. துரைசாமி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக கேரளா மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ் ஒன்று வந்தது.
அந்த பஸ்சை நிறுத்தி சோதனையிட்டபோது உரிய ஆவணங்கள் இல்லாமல் தமிழகத்துக்கு இயக்கப்படுவது தெரிய வந்தது. மேலும் இங்கு அனுமதி வாங்கியது போல போலியான ஒரு ஆவணத்தையும் வைத்திருந்துள்ளனர்.
இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசில் துரைசாமி புகார் செய்தார் . அதன்பேரில் ஆம்னி பஸ் உரிமையாளர் சிராஜ் எம்.நாயர் , டிரைவர்கள் லாலுமோஹனன், சஞ்சீவ் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- அவ்வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்றில் மண் ஏற்றி வந்தது கண்டு தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
- உரிய அனுமதி பெறாமல் மண் கடத்தி வந்தது தெரிய வந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகேயுள்ள கொண்டப்ப நாயக்கன்பள்ளி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்றில் மண் ஏற்றி வந்தது கண்டு தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது உரிய அனுமதி பெறாமல் மண் கடத்தி வந்தது தெரிய வந்தது.
அந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரியில் வந்த சர்தார் ஷா (வயது 36), பாதுஷா (54) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
- பல்வேறு இடங்களில் விசாரித்தும் அவர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்க வில்லை.
- முரளி என்ற வாலிபர் கடத்தி சென்று விட்டதாக ஓசூர் டவுன் போலீசில் அஞ்சப்பா புகார் செய்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
ஓசூர் அருகேயுள்ள தேர்ப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அஞ்சப்பா. இவரது மகள் நிவேதா (வயது 22).
நேற்று சர்ச்சுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்ற நிவேதா அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
பல்வேறு இடங்களில் விசாரித்தும் அவர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்க வில்லை.
இந்நிலையில் நிவேதாவை பேரிகை பகுதியை சேர்ந்த முரளி என்ற வாலிபர் கடத்தி சென்று விட்டதாக ஓசூர் டவுன் போலீசில் அஞ்சப்பா புகார் செய்துள்ளார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான நிவேதாவையும், அவரை கடத்தியதாக கூறப்படும் முரளியையும் தேடி வருகின்றனர்.
- நேற்று மாரியப்பன் மூக்காக கவுண்டனூருக்கு சென்று கண்ணகியை சரமாரியாக கத்தியால் குத்தினார்.
- அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மாரியப்பன் அங்கிருந்து தப்பி ஓடினார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே சின்ன ஆலேரஅள்ளி அடுத்த இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது69). இவருக்கு 2 மனைவிகள் உள்ளன. 2-வது மனைவி கண்ணகி.
இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கண்ணகி பிரிந்து தனது மகள் வீடான மூக்கா கவுண்டனூரில் வசித்து வந்தார்.
மாரியப்பன் குடும்ப நடத்த வருமாறு தனது மனைவி கண்ணகிைய அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுத்துள்ளார். இதனால் நேற்று மாரியப்பன் மூக்காக கவுண்டனூருக்கு சென்று கண்ணகியை சரமாரியாக கத்தியால் குத்தினார்.
இதில் அவர் வலி தாங்க முடியாமல் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மாரியப்பன் அங்கிருந்து தப்பி ஓடினார்.
உடனே கண்ணகியை மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து மத்தூர் போலீசார் பெண்ணை தாக்கியதாக வழக்குபதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர்.
- காவேரிப்பட்டணம் அருகே கல்குட்டபட்டியை அடுத்த மேல்கொட்டாயை சேர்ந்தவர் சின்னசாமி.
- மலைப்பாம்பை கிணற்றிலிருந்து வெளியே எடுப்பதற்காக இன்று நடராஜ் என்பவர் முன்வந்து கிணற்றில் இறங்கியுள்ளார்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே கல்குட்டபட்டியை அடுத்த மேல்கொட்டாயை சேர்ந்தவர் சின்னசாமி. இவர் விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இவருடைய 50 அடி ஆழ கிணற்றில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மலைப்பாம்பு விழுந்ததை பார்த்துள்ளார்.
அந்த மலைப்பாம்பை கிணற்றிலிருந்து வெளியே எடுப்பதற்காக இன்று நடராஜ் என்பவர் முன்வந்து கிணற்றில் இறங்கியுள்ளார். மலைப்பாம்பை கிணற்றின் பாதி வரை தூக்கி வந்த பின்பு எடை தாங்காமல் மலைப்பாம்பும் அவரும் கிணற்றில் விழுந்துள்ளனர்.
அப்பொழுது அவரை மலைப்பாம்பு இறுக்கி பிடித்துள்ளது. அவர் கூச்சலிடவே அருகில் இருப்பவர்கள் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடாசலம் தலைமையில் தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் நடராஜனை மீட்க போராடினர். ஆனால் மலைபாம்பு அவரை இறுக்கியதில் நடராஜ் உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
இது குறித்து காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மலைபாம்பை காப்பாற்ற சென்றவர் அந்த பாம்பாலேயே உயிரிழந்த தகவல் அறிந்த சுற்றுப்பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
- முகாமில் குடிமை பொருள் வட்ட வழங்கல் தாசில்தார் ரமேஷ் தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளைக் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நேற்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஒவ்வொரு தாலுகாவில் ஒரு கிராமத்தில் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
அதன்படி, கிருஷ்ணகிரி தாலுகாவில் தங்காடிகுப்பம் கிராமத்தில் நடந்த பொது வினியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் குடிமை பொருள் வட்ட வழங்கல் தாசில்தார் ரமேஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொலைபேசி எண், முகவரி மாற்றம் தொடர்பான மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வட்ட பொறியாளர் சரவணன், விற்பனையாளர்கள் சரவணன், வேடியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மிடுகரபள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிதாக தார் சாலை அமைக்கப்படவுள்ளது.
- நிகழ்ச்சியில், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய் பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சியின் 37-வது வார்டுக்குட்பட்ட மிடுகரபள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிதாக தார் சாலை அமைக்கப்படவுள்ளது.
இதையொட்டி நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய் பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
இதில் ஆணையாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி கவுன்சிலர்கள் சென்னீரப்பா, மாதேஸ்வரன் பகுதி செயலாளர் திம்மராஜ் மற்றும் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பழைய மது பாட்டில் ஒன்றை எடுத்து அதில் இருந்த திரவம் மது என்று நினைத்து குடித்து விட்டார்.
- அந்த காலி பாட்டிலில் கமலநாதனின் வீட்டில் உள்ளவர்கள் பூச்சி மருந்தை ஊற்றி வைத்திருந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள சாமல்பட்டி குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் கமலநாதன் (வயது 25). கூலி தொழிலாளி . இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.
கடந்த 6-ந்தேதி குடிப்பதற்கு பணம் கிடைக்காமல் தவித்து வந்த கமலநாதன் வீட்டில் கிடந்த பழைய மது பாட்டில் ஒன்றை எடுத்து அதில் இருந்த திரவம் மது என்று நினைத்து குடித்து விட்டார்.
ஆனால் அந்த காலி பாட்டிலில் கமலநாதனின் வீட்டில் உள்ளவர்கள் பூச்சி மருந்தை ஊற்றி வைத்திருந்துள்ளனர்.
இதனால் அதை குடித்த கமலநாதன் உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி அர்ச்சனா தந்த புகாரின்பேரில் சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






