என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுமதியின்றி மண் கடத்திய 2 பேர் கைது"

    • அவ்வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்றில் மண் ஏற்றி வந்தது கண்டு தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
    • உரிய அனுமதி பெறாமல் மண் கடத்தி வந்தது தெரிய வந்தது.

     கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகேயுள்ள கொண்டப்ப நாயக்கன்பள்ளி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்றில் மண் ஏற்றி வந்தது கண்டு தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது உரிய அனுமதி பெறாமல் மண் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    அந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரியில் வந்த சர்தார் ஷா (வயது 36), பாதுஷா (54) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    ×