search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது என்று நினைத்து விஷத்தை குடித்த தொழிலாளி சாவு"

    • பழைய மது பாட்டில் ஒன்றை எடுத்து அதில் இருந்த திரவம் மது என்று நினைத்து குடித்து விட்டார்.
    • அந்த காலி பாட்டிலில் கமலநாதனின் வீட்டில் உள்ளவர்கள் பூச்சி மருந்தை ஊற்றி வைத்திருந்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள சாமல்பட்டி குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் கமலநாதன் (வயது 25). கூலி தொழிலாளி . இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

    கடந்த 6-ந்தேதி குடிப்பதற்கு பணம் கிடைக்காமல் தவித்து வந்த கமலநாதன் வீட்டில் கிடந்த பழைய மது பாட்டில் ஒன்றை எடுத்து அதில் இருந்த திரவம் மது என்று நினைத்து குடித்து விட்டார்.

    ஆனால் அந்த காலி பாட்டிலில் கமலநாதனின் வீட்டில் உள்ளவர்கள் பூச்சி மருந்தை ஊற்றி வைத்திருந்துள்ளனர்.

    இதனால் அதை குடித்த கமலநாதன் உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி அர்ச்சனா தந்த புகாரின்பேரில் சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×