என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோழிப்பண்ணை அதிபரை கடத்தி ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல்- 3 பேருக்கு தர்ம அடி
- ரூ. 2 லட்சம் தந்தால் தான் சுரேஷை விடுவோம் இல்லாவிட்டால் நடப்பதே வேறு என மிரட்டல் விடுத்தனர்.
- வேலூர் வடக்கு போலீஸ் கடத்தல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் லத்தேரி அடுத்த பன மடங்கியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 28) கோழிப் பண்ணை நடத்தி வருகிறார். நேற்று இரவு 8.30 மணிக்கு கோழி பண்ணைக்கு தீவனம் வாங்குவதற்காக பைக்கில் வேலூர் வந்தார்.
கொணவட்டம் அருகே வந்தபோது அவரை 5 பேர் கொண்ட கும்பல் மடக்கினர். மேலும் கத்தியை காட்டி மிரட்டி அவரை ஒதுக்குப்புறமான இடத்திற்கு கடத்திச் சென்றனர்.
அங்கு வைத்து அவரது செல்போனை பறித்தனர்.
தொடர்ந்து அவரது குடும்பத்தினரை மிரட்டி பணம் பறிக்க கும்பல் திட்டமிட்டனர். அதன்படி சுரேஷின் செல்போனில் இருந்து அவருடைய வீட்டிற்கு பேசினர்.
ரூ. 2 லட்சம் தந்தால் தான் அவரை விடுவோம் இல்லாவிட்டால் நடப்பதே வேறு என மிரட்டல் விடுத்தனர்.
சுரேஷின் குடும்பத்தினர் இது குறித்து அதை ஊரைச் சேர்ந்த உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் கூட்டாக கும்பல் கூறிய இடத்திற்கு வந்தனர். அவர்களை கண்டதும் சுரேஷை விட்டுவிட்டு கும்பல் தப்பி ஓடினர். அவர்களில் 3 பேரை மடக்கிப் பிடித்தனர். 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
பிடிபட்ட 3 பேரையும் சரமாரியாக தாக்கினர். அவர்களை வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






