என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செடிகொடிகளை அகற்றி தூர்வார கோரிக்கை
    X

    செடிகொடிகளை அகற்றி தூர்வார கோரிக்கை

    • முத்தனூர் பகுதியில் உபரி நீர் கால்வாயில்தூர்வார கோரிக்கை
    • மழை நீரும் தங்கு தடை இன்றி சென்று புகளூர் வாய்காலில் கலப்பதற்காக, இந்த உபரி கால்வாய் வெட்டப்பட்டது.

    வேலாயுதம் பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே கவுண்டன்புதூர், செட்டிதோட்டம், செல்வநகர் வழியாக முத்தனூர் பகுதியில் உள்ள புகளூர் வாய்க்காலில் கலக்கும் வகையில் உபரி நீர் கால்வாய் வெட்டப்பட்டது.

    விவசாயத் தோட்டங்களில் இருந்து வெளியேறும் உபரி நீரும், மழை காலங்களில் வெளியேறும் மழை நீரும் தங்கு தடை இன்றி சென்று புகளூர் வாய்காலில் கலப்பதற்காக, இந்த உபரி கால்வாய் வெட்டப்பட்டது.

    இந்நிலையில் உபரி நீர் கால்வாய் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக கால்வாய்க்குள் ஏராளமான செடி, கொடிகள் ஆள் உயரம் வளர்ந்து உள்ளது. இதன் காரணமாக இந்த கால்வாய் வழியாக உபரிநீரும் மழை நீரும் செல்ல முடியாமல் அருகாமையில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

    வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டதால் அதிக மழை பெய்யும் சூழ்நிலை உள்ளது. எனவே உள்ளாட்சித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கால்வாயில் முளைத்துள்ள செடி கொடிகளை அகற்றிட வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×