என் மலர்
உள்ளூர் செய்திகள்

மது விற்ற பெண்கள் கைது
- கரூரில் மது விற்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
- தோகைமலை போலீசார் ரோந்து பணியின் போது சிக்கினர்
கரூர்,
கரூர் தோகைமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திண்டுக்கல் மாவட்டம் வெள்ளைய கவுண்டனூரை சேர்ந்த ராஜ்கணேஷ் (வயது 29) என்பவர் கொசூர் கடைவீதியில் நடத்தி வரும் தனது பெட்டிக்கடையிலும், கம்பளியாம்பட்டியை சேர்ந்த ராசம்மாள் (50) தனது பெட்டிக்கடையிலும் பதுக்கி வைத்து மது விற்றுக்கொண்டிருந்தனர். இதையடுத்து ராஜ்கணேஷ், ராசம்மாள் ஆகியோரை தோகைமலை போலீசார் கைது செய்தனர். இதேபோல் புன்னம் சத்திரம் அருகே பெரிய ரெங்கம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் மது விற்ற அதே பகுதியை சேர்ந்த திருமூர்த்தி மனைவி வசந்தா (64) என்பவரை வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
Next Story






