என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது
கரூர்:
காவிரி ஆற்றில் மாயனுார் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது.நேற்று 2,746 கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,642 கன அடியாக குறைந்தது. காவிரியாற்றில் குடிநீர் தேவைக்காக, அந்த தண்ணீர் முழுதும் அப்படியே திறந்துவிடப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.அமராவதி அணையில் இருந்து ஆற்றில் காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 300 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 440, கன அடியும் தண்ணீர் திறக்கப் பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம், 67.79 அடியாக இருந்தது. அணைக்கு, வினாடிக்கு, 29 கன அடி தண்ணீர் வந்தது.க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பா ளையம் அணைக்கு தண்ணீர் வரத்து நின்றது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 15.38 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.