என் மலர்
உள்ளூர் செய்திகள்

மது விற்ற இரண்டு பேர் கைது
- மது விற்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
- கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
கரூர்,
தோகைமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தோகைமலை சந்தைபேட்டையில் உள்ள இட்லி கடையில் அதே பகுதியை சேர்ந்த அழகுக்குமார் (வயது 44) என்பவர் மது விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை தோகைமலை போலீசார் கைது செய்தனர். இதேபோல் புன்னம் சத்திரம் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே மது விற்று கொண்டிருந்த மயிலாடுதுறை மாவட்டம் வள்ளுவகுடி பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் (33) என்பவரை வேலாயும்பாளையம் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story






