என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தம்பதியை தாக்கிய கொத்தனார் கைது
  X

  தம்பதியை தாக்கிய கொத்தனார் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தம்பதியை தாக்கிய கொத்தனார் கைது செய்யபட்டார்
  • மேலும் தலைமறைவான 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

  கரூர்,

  கரூர் குளித்தலை அருகே உள்ள பங்களாபுதூரை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி மலர்க்கொடி (வயது 45). இவர் கடந்த 5-ந்தேதி தனது வீட்டில் கணவர் மற்றும் உறவினர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு திருச்சாப்பூர் பகுதியை சேர்ந்த கொத்தனாரான திலீப் என்பவர் 3 பேருடன் வந்து உங்களது மகன் அரவிந்த் எங்கே என்று கேட்டுள்ளனர். அதற்கு மலர்க்கொடி திருச்சாப்பூர் சென்றிருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து 4 பேரும் சேர்ந்து மலர்க்கொடி, செல்வம், மலர்க் கொடியின் தங்கை ஜெயந்தி, உறவினர் தங்கம் ஆகிய 4 பேரையும் தகாத வார்த்தையால் திட்டி தாக்கி உள்ளனர்.

  பின்னர் செல்வத்தை அரிவாளால் வெட்டி ரத்த காயம் ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் காயம் அடைந்த செல்வம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மலர்க்கொடி கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் திலீப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×