என் மலர்
உள்ளூர் செய்திகள்

கரூர், மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்
- கரூர், மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
- விதிகளை மீறி மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், தெரிவித்துள்ளார்.
கரூர்,
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 4-ந் தேதி கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும், அரசு மதுபான டாஸ்மாக் கடைகள், சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள், உரிமம் பெற்ற ஓட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் மூடப்பட வேண்டும். அன்றைய தினத்தில் விதிகளை மீறி மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், தெரிவித்துள்ளார்.
Next Story






