என் மலர்
உள்ளூர் செய்திகள்

கால்நடை தீவன சந்தை அமைக்க கோரிக்கை
- மேய்ச்சல் நிலம் குறைவாக உள்ளதால், தீவனங்கள் வாங்குவதற்கு ஏதுவாக சந்தை அமைக்க வேண்டும்
- க.பரமத்தி சுற்றுவட்டார கிராம மக்கள் கோரிக்கை
கரூர்,
க.பரமத்தி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதிகளில் பசு, எருமை, வெள்ளாடு, செம்மறி ஆடு போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இதற்காக பலர் தங்களது தோட்டத்தில் தீவனத்துக்காக, கம்பு ஒட்டுப்புல், கினியாபுல், கொழுக்கட்டைப் புல் மற்றும் பயறு வகையில், வேலி மசால், குதிரை மசால், முயல் மசால், தீவன தட்டைப் பயறு போன்றவற்றை பயிரிட்டுள்ளனர். தீவன பயிர்களை வளர்க்க நிலம் இல்லாத விவசாயிகள், கால்நடைகளை சாலையோரத்தில் மேயவிட்டு வளர்த்து வருகின்றனர். எனவே, கால்நடை தீவனங்களை தயாரிக்கும் விவசாயிகளிடம், தீவனங்களை பெற ஏதுவாக தீவன சந்தை அமைக்க வேண்டும் என்பது, இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாகும்.
Next Story






