என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கே.பிச்சம்பட்டியில் குவாரி அமையும் ஊரில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த பொதுமக்கள் கோரிக்கை
    X

    கே.பிச்சம்பட்டியில் குவாரி அமையும் ஊரில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த பொதுமக்கள் கோரிக்கை

    • கே.பிச்சம்பட்டியில் குவாரி அமையும் ஊரில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்
    • பெரும்பாலான பொதுமக்கள், கே.பிச்சம்பட்டியில் கிரானைட் கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், தான்தோன்றி மலை பஞ்., யூனியன் கே.பிச்சம்பட்டியில், தனியார் தரப்பில், கிரானைட் கல் குவாரி அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம், மாசு கட்டுபாடு வாரியம் சார்பில், வெள்ளியணையில் நடந்தது. அதில், கே.பிச்சம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.அதில், பெரும்பாலான பொதுமக்கள், கே.பிச்சம்பட்டியில் கிரானைட் கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். 'மேலும், வெள்ளியணையில் நடக்கும், கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்து விட்டு, கிரானைட் குவாரி அமையவுள்ள, கே.பிச்சம்பட்டியில் நடத்த வேண்டும், என, கோரிக்கை வைத்தனர். அதைகேட்ட டி.ஆர்.ஓ., லியாகத், "பொது மக்களின் கருத்துக்கள், பதிவு செய்யப்பட்டு, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அரசின் முடிவுக்கு ஏற்ப, மாவட்ட நிர்வாகம் செயல்படும்," என தெரிவித்தார். கூட்டத்தில், கரூர் மாவட்ட மாசு கட்டுபாடு வாரிய பொறியாளர் ஜெயலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.


    Next Story
    ×