search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்குறளை உலகம் முழுவதும் கொண்டு செல்வது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம்
    X

    திருக்குறளை உலகம் முழுவதும் கொண்டு செல்வது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம்

    • திருக்குறளை உலகம் முழுவதும் கொண்டு செல்வது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம்
    • 196 நாடுகளின் பாடத்திட்டத்தில் திருக்குறளை வைக்க ஆவணம் செய்ய வேண்டும்

    கரூர் :

    உலகத்துக்கே கல்வி நூலாக திகழும் திருக்குறளை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் சென்னை குறள் மலை சங்கம் மற்றும் கரூர் வள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியோடு இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    இது குறித்து கரூர் வள்ளுவர் கல்வி குழும தாளாளர் செங்குட்டுவன் கூறியதாவது:

    உலக பொதுமுறையாக விளங்கும் திருக்குறளை மலைக் கல் வெட்டில் பதித்து திருக்குறளைமாமலை உருவாக்குவதும், உலகத்து–க்கு முக்காலத்திற்கு பொருந்தும் வகையில் எழுத–ப்பட்டிருக்கும் திருக்குறளை யுனெஸ்கோ நிறுவனம் உலக நூலாக அங்கீகரிக்க வேண்டும் எனவும், திருக்குறள் ஒரு கல்வி நூலாக இருப்பதால் ஐக்கிய நாடுகளின் சபையின் உறுப்பு நாடுகளில் இருந்து 196 நாடுகளின் பாடத்திட்டத்தில் திருக்குறளை வைக்க ஆவணம் செய்ய வேண்டும் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க நோக்கங்களுடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    இதன் பயனாக கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இனிவரும் காலங்களில் பயிலும் மாணவர்கள், பேராசிரியர்கள் குரல் மலை சங்கம் நடத்தும் அனைத்துக் கூட்டங்கள், கருத்தரங்கள், மாநாடுகள் அனைத்திலும் பங்கேற்கும் வாய்ப்புகளை பெறுவதோடு குறல் மலை சங்கம் வெளிநாடுகளில் நடத்தும் மாநாடுகளில் பங்கேற்கும் வாய்ப்புகளையும் பெறுவார்கள்.

    முக்கியமாக இச்சங்கத்தின் உறுப்பினராகவும் வாய்ப்பையும் இந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பெறுவார்கள். வள்ளுவர் கல்லூரியில் குறள் மலை சங்கத்தின் மூலம் நடத்தப்படும் கூட்டங்கள், கருத்தரங்குகள் மாநாடுகள் ஆகியவற்றை தலைமை ஏற்று நடத்துவதற்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து மொழியியல் வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டு சிறப்பிக்கப்படுவார்கள்.

    இதன் மூலம் மாணவர்கள் நேர்மையான வாழ்க்கை திறன் மேம்படுவதோடு, இனிவரும் சமுதாய வளர்ச்சிக்கு நேர்மையான சிந்தனை கொண்ட அற்புத மனிதரை உருவாக்கும் வாய்ப்பு இந்த ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்படும் என கூறினார்.

    Next Story
    ×