search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
    X

    வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

    • வக்கீல்கள் தாக்கப்படுவதை கண்டித்து கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது
    • இரும்புகரம் கொண்டு தடுத்திட கோரிக்கை

    கரூர்,

    கரூர் வக்கீல்கள் சங்க செயலாளர் தமிழ் வாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில் வக்கீல் முத்துக்குமார் ரவுடிகளால் கடந்த மாதம் கொல்லப்பட்டார். இப்போது சென்னை சைதாப்பேட்டை வக்கீல் சங்க செயற்குழு உறுப்பினர் ஜெய்கணேஷ் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இப்படி, தமிழகத்தில் வக்கீல்கள் தொடர்ந்து படு கொலை செய்யப்படுவதும், தாக்கப்படுவதும், மிரட்டப்படுவதும் தொடர்ந்து வருவது வன்மை யாக கண்டிக்கத்தக்கது. இது போன்ற செயல்களை இரும்புக்கரம் கொண்டு தமிழக முதல்வர் தடுத்திட வேண்டும்.குற்றவாளிகளை காவல் துறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இப் படி வக்கீல்கள் கொலை செய்யப்படுவதை கண்டித் தும், தமிழகம் முழுவதும் வக்கீல்கள் மீது போடப் பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வலியுறுத் தியும், இன்று (28ம் தேதி) ஒரு நாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோர்ட்களில் வக்கீல்கள் பணிக்குச் செல்லாமல் இருக்க முடிவு செய்யப்பட் டுள்ளது. அதன்படி கரூர் மாவட்டத்தில் வக்கீல்கள் இன்று பணிக்குச் செல்லாமல் புறக்கணிப்பு செய்ய உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×